தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமைச் செயலகம் முன்பாக 17ஆவது மே 18ஐ நினைவிற் கொள்ளும் முகமாக இன்று காலை (18.05.2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான சி.தேவகுமார் நினைவுச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்த இந் நிகழ்ச்சியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல நூற்றுக்கணக்கானவர்கள் உணர்வுடன் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றார்கள்.

பிள்ளைகளுடன் வந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கஞ்சியை அருந்தக் கொடுத்தது மாத்திரமல்லாது, இந்தக் கஞ்சி குடித்தலின் உள்ளார்ந்த நோக்கத்தையும் அவர்களுக்குப் புரியக்கூடிய விதத்தில் எடுத்துச் சொன்னதையும் அவதானிக்க முடிந்தது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன் ஆகியோருடன் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்