மாணவன் விபத்தில் பலி

பிடிகல – எல்பிட்டிய வீதியின் ஹேவஸ்ஸ, 4ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி, வீதியோரமிருந்த சிறிய பாலத்தின் பாதுகாப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர். பிடிகல, ஹேவஸ்ஸ பகுதியை சேர்ந்த ஹத்தக மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று, பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றிருந்த ஹால்பந்தெனி ஹேவகே சஹான் லக்ஷித என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த மாணவனை எல்பிட்டிய வைத்தியசாலைக்குக் […]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கபில சந்திரசேனவின் மர்ம மரணம்; வௌியான புதிய தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவிற்குச் சொந்தமான வீட்டின் CCTV கமரா தொகுதியில் தரவுகள் சேமிக்கப்படவில்லை என கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. குறித்த வீட்டின் பாதுகாப்பு கமரா தொகுதி இயங்கும் நிலையில் இருந்தபோதிலும், அதில் தரவுகள் பதிவு செய்யப்படுவதில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் […]

கனமழை படிப்படியாகக் குறையும் : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை எதிர்வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். தற்போது நிலவி வரும் வளிமண்டலத் தொகுதியானது மிகவும் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதே இதற்குக் காரணமாகும். இந்த வளிமண்டலத் தொகுதியின் நகர்வு காரணமாக வரும் நாட்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இன்னும் காணப்பட்டாலும், மழையின் தீவிரம் மற்றும் வேகம் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், […]

ட்ரம்ப் சீனாவில் இருந்து ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரானுடன் நிலவும் போர்ச் சூழல் தொடர்பில் தனது பொறுமை எல்லை கடந்து செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, பீஜிங்கில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் நெருக்கடியான சூழலைத் தணிப்பதற்கு ஈரான் உடனடியாக ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். […]

வட மாகாணத்தில் முறையற்ற ஆசிரிய இடமாற்றம்; ஆளுநர் அலுவலகம் முன்பாகப் போராட்டம்

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச்சபையை மீறி முறையற்ற ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்று (15) ஆளுநர் அலுவலகம் முன்பாக கொட்டும் மழையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இடமாற்றச்சபையை மீறி தாங்கள் […]

வட்டுக்கோட்டையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் வரை – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தின் 50வது ஆண்டை பிரித்தானியத் தமிழர்கள் நினைவுகூர்ந்தனர்

சுயநிர்ணய உரிமைக்கான சுதந்திர தமிழீழ அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரித்தானியத் தமிழர்கள் இன்று ஐக்கிய இராச்சிய (UK) நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ‘தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சியை’ (Tamil Political Framework Initiative) அங்கு முறைப்படி ஆரம்பித்து வைத்தனர். இந்த முன்முயற்சியானது, தமிழ் தேசத்திற்கான ஒரு நீதியான மற்றும் நிலையான தீர்வை வரையறுக்கும் வகையிலான அரசியலமைப்பு ஆவணமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அரசியல் கட்டமைப்பானது, […]

தமிழ் ஈழம் குறித்த சர்வதேச வாக்கெடுப்புக்கு அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் அழைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தமிழ் ஈழம் குறித்து சர்வதேச ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட முன்னணி தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்றிணைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் டி.சி.யிலிருந்து மே 14 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது தமிழ் தேசத்தின் கூட்டு அரசியல் அபிலாஷைகளின் “நிச்சயமான வெளிப்பாடு” என்று விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயக வழியில் சுதந்திரத் […]

தமிழருக்கு தனியான கலாசார அடையாளம் இருக்கக் கூடாது என்பதே யாழ் கலாசார மண்டபத்துக்குள் புத்த சாசன அமைச்சு உள்ளீர்ப்பின் காரணம் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு என கலாச்சார ரீதியாக எந்த ஒரு தனி அடையாளமும்இருக்கக்கூடாது என்ற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எண்ணமே யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்துக்குள் புத்தசாசன அமைச்சு உள்வாங்கப்பட்டமைக்கு பிரதான காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ் தென்மராட்சி பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதி […]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணப் பரிமாற்றத்தில் தவறு: விசாரணைக்கு கோருகிறார் தயாசிறி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றம் ஒன்றில் தவறு நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். துபாய் தொடர்பான ஏஜென்ட் நடவடிக்கைகளுக்காக செலுத்தப்பட வேண்டிய பணம், தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் முக்கிய விபரங்கள் வருமாறு: தவறான பரிமாற்றம்: விமான நிறுவனத்தின் சென்னை கிளை மற்றும் துபாய் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளுக்காக […]

விசா விதிமுறைகளை மீறிய 17 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது

இலங்கையில் முறையான விசா இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 17 வெளிநாட்டவர்கள், இந்த வாரம் நடத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சோதனைகள் குறித்த விபரங்கள் வருமாறு: வாஸ்கடுவ பகுதியில் கைது: வியாழக்கிழமை (14), பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் களுத்துறை வடக்கு காவல் பிரிவிற்குட்பட்ட வாஸ்கடுவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை நடத்தினர். இதன்போது 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 22 முதல் 56 […]