“மதுரையில் ரூ.400 கோடி ஊழல்; திமுக – அதிமுக ரகசிய டீல்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பகீர்!
மதுரை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகராட்சியில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் மர்மங்களை உடைத்துப் பேசினார். அமைச்சர் கூறுகையில், “மதுரை மாநகராட்சியில் நடந்த பிரம்மாண்ட ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். அதேபோல், தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மதுக்கடைகளைப் படிப்படியாக மூடவும் எங்களது அரசு உறுதியான […]
“ஏழை மக்களின் அடிவயிற்றில் கை வைப்பதா?” – பெட்ரோல் விலை உயர்வுக்கு திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைச் சாடியுள்ள அவர், இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடியும் வரை காத்திருந்த பாஜக அரசு, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் திடீரென உயர்த்தியுள்ளது. […]
சபாநாயகரைத் தொடர்ந்து கவர்னரைச் சந்திக்க எடப்பாடி திட்டம்! அதிமுக மோதல் உச்சக்கட்டம்!

சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே சபாநாயகரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி. முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கவர்னர் தற்போது கேரளாவில் இருப்பதால், அவர் சென்னை […]
“தகுதி நீக்க நடவடிக்கை பாயும்; முதல்வரே இதைச் செய்யாதீர்கள்!” – விசிக எம்.பி. ரவிக்குமார் எச்சரிக்கை!

சென்னை: அதிமுகவிலிருந்து பிரிந்து தவெக அரசுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ-க்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட ரீதியான சிக்கல்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். ரவிக்குமார் தனது அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே கட்சியின் கொறடாவை நியமிக்க அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன. கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது […]
சாதாரண அரசு ஊழியர் போல் மதிய உணவுடன் கோட்டைக்கு வரும் முதல்வர் விஜய்! அதிகாரிகள் நெகிழ்ச்சி!
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், நேர மேலாண்மையிலும் எளிமையிலும் புதிய முத்திரையைப் பதித்து வருகிறார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். வழக்கமான அரசு ஊழியரைப் போலத் தனது மதிய உணவைக் கையோடு கொண்டு வந்து, குறித்த நேரத்திற்கு முன்பே தலைமைச் செயலகம் வந்து அவர் பணியாற்றுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றது முதல், சட்டமன்றக் கூட்டத்தொடர் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு என அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு […]
அரசு அலுவலகங்களில் இனி ‘தளபதி’ தரிசனம்! முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் புகைப்படம் தமிழக அரசால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தப் புகைப்படம் முறையாகக் காட்சிப்படுத்தப்படும். இது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் அரசாணை அனுப்பியுள்ளார். அதில், “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம், அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் […]
வேலுமணி அணியில் முதல் விக்கெட்? எடப்பாடி பக்கம் தாவும் கே.சி.வீரமணி! வாணியம்பாடியில் உருக்கமான பேச்சு!

திருப்பத்தூர்: அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி மோதலில் ஒரு முக்கியத் திருப்பமாக, எஸ்பி வேலுமணி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், உருக்கமான சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் கே.சி. வீரமணியும் ஒருவர். இதற்காக அவரது மாவட்டச் செயலாளர் […]
சொன்ன சொல்லைக் காப்பாற்றிய முதல்வர் விஜய்! மகளிரின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியளித்திருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இன்று மகளிர் உரிமைத் தொகையை விடுவித்துத் தனது வாக்கை மெய்ப்பித்துள்ளார். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், கிராமப்புறப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் இத்திட்டம் தொடருமா என்ற அச்சம் நிலவியது. குறிப்பாக, இத்திட்டத்தை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்குவதாகத் தவெக தனது தேர்தல் அறிக்கையில் […]
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவருக்கு ஆதரவான குழுக்கள் கத்தோலிக்க திருச்சபைக்குள் உள்ளதாக முறைப்பாடு!

கத்தோலிக்க திருச்சபையினுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாக செயற்படும் குழுக்கள் இருப்பதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதுதரகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்களதீப தேசிய அமைப்பின் தலைவர் ஜயந்த லியனகே தலைமையிலான குழுவினரால் இந்த முறைப்பாடு இன்றைய தினம் (15) அளிக்கப்பட்டுள்ளது.
பட்டிருப்பு பாலத்தருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அசிரியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுமியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு பாலத்தருக்கில் இன்று (15) வெள்ளிக்கிழமைமுள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு […]