திருப்பத்தூர்:
அதிமுகவில் நிலவி வரும் கோஷ்டி மோதலில் ஒரு முக்கியத் திருப்பமாக, எஸ்பி வேலுமணி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், உருக்கமான சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் கே.சி. வீரமணியும் ஒருவர். இதற்காக அவரது மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து, அந்தப் பதவிக்கு பசுபதியை நியமித்தார். இந்நிலையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய வீரமணி, “20 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிவிட்டேன்; பார்க்காத பதவிகள் இல்லை. தொகுதி மக்களின் நலனுக்காகவும், சில நிர்பந்தங்கள் காரணமாகவுமே தவெக-வுக்கு ஆதரவு அளித்தேன். ஆனால், இனி வரும் காலங்களில் எனது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். புதிய மாவட்டச் செயலாளருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டை தொகுதியில் தவெக வேட்பாளரை 16,083 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற கே.சி. வீரமணி, மீண்டும் எடப்பாடி அணிக்குத் திரும்பியிருப்பது வேலுமணி – சி.வி.சண்முகம் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வேலுமணி அணியில் பிளவு தொடங்கிவிட்டதோ என்ற விவாதங்கள் அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளன.
#KCVeeramani #ADMK_Crisis #EPS #SPVelumani #Jolarpettai #BreakingNews #May15 #TamilNaduPolitics #AiadmkSplit #PoliticalTurn #Uturn #Vaniyambadi #ThalapathyVijay #TVK_Support #PartyUnity #EdappadiPalaniswami #TNAssembly #TamilNews #VictoryForEPS #ADMK_Update_“`