இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு
இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. இன்று (மே 15) காலை 6:00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் வருமாறு: பாதிக்கப்பட்ட பகுதிகள்: எட்டு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சீரற்ற […]
ரஷ்ய தூதுக் குழு கிழக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

ரஷ்ய பல்கலைக்கழகத்தின் சிறப்பு தூதுக்குழு ஒன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் ரஷ்ய மொழியை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ரஷ்ய மொழி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவது, அவர்களின் சர்வதேச தொடர்பாடல் திறன்களையும் கல்வி பன்முகத்தன்மையையும் மேம்படுத்துவதற்கான முக்கியமான […]
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திடமும் இந்த அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாளான நேற்று (14) கொட்டும் மழையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தாதேசிய பாடசாலைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி வழங்கலும் நடைபெற்றது. கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் […]
“உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை; மதவாதிகளிடம் அதிமுக அடகு!” – ஜவஹர் அலி அதிரடி விலகல்!

சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். கட்சியிலிருந்து விலகியது குறித்து ஜவஹர் அலி கூறுகையில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினருக்கு ஒரு சீட் கூட எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை. ‘முஸ்லிம்கள் அதிமுக-வுக்கு ஓட்டு போடமாட்டார்கள், அப்புறம் ஏன் உங்கள் சமூகத்திற்கு சீட் கொடுக்க வேண்டும்?’ என அவர் கேட்டார். மேலும், அதிமுக […]
“சனாதனம் என்பது சமத்துவமின்மை; உதயநிதியை எதிர்க்கவில்லை!” – தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி!

சென்னை: சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் சனாதனம் என்பது சமத்துவமின்மையைக் குறிக்கிறது; அதைத்தான் நாங்களும் எதிர்க்கிறோம்” என அவர் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” எனக் கூறியது மீண்டும் தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெக […]
“சனாதனம் என்பது மக்களைப் பிரிப்பது; பயப்பட மாட்டேன்!” – உதயநிதி ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

சென்னை: “சனாதனம் குறித்து நான் பேசிய பேச்சுக்காகப் பயப்படுபவன் நான் அல்ல” எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சனாதன தர்மம் குறித்து அவர் பேசியது நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இன்று தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் அவர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். உதயநிதி தனது பதிவில், “சட்டப்பேரவையில் நான் பேசிய கருத்துக்காகச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். எதிர்ப்புக்களிலேயே வளர்ந்ததுதான் திராவிட இயக்கம். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் […]
பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்க! – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் அவசர கடிதம்!

சென்னை: தமிழகத்தின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையைப் பாதுகாக்கும் வகையில், பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில், “இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. லட்சக்கணக்கான ஊரகப் பெண் தொழிலாளர்கள் இத்துறையை நம்பியே உள்ளனர். ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் பருத்தி விலை 25 சதவீதம் […]
“மோடி ஜாதகத்தின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய் ஜாதகம்!” – பிரதமர் யோகம் இருப்பதாக ஜோதிடர் ரத்தன் பண்டிட் கணிப்பு!

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல், விஜய்யின் எதிர்காலம் குறித்துப் பல அதிரடி கணிப்புகளை வெளியிட்டுள்ளார். “விஜய் வெறும் முதலமைச்சர் மட்டுமல்ல, பிற்காலத்தில் இந்தியப் பிரதமராகும் யோகம் அவருக்கு உண்டு” என அவர் தெரிவித்துள்ளார். தனது பதவி ரத்து செய்யப்பட்டது குறித்துப் பேசிய ரத்தன் பண்டிட், “எனக்குப் பதவி வழங்கப்பட்டதே முதலில் தெரியாது. ரத்து செய்யப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை, விஜய்யின் […]
“விஜய் முதல்வர் ஆவதைத் தடுக்க அதிமுக – திமுக ரகசியக் கூட்டணி!” – போட்டு உடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
சென்னை: முதலமைச்சர் விஜய் பதவியேற்பதைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடந்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வில்லிவாக்கத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “65 சதவீத மக்கள் தவெக-வுக்கு ஓட்டு போடவில்லை என உதயநிதி பேசுகிறார். 2006-ல் வெறும் 26 சதவீத வாக்குகளைப் பெற்றுத்தான் கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார் என்பதை அவர் […]
“மை” வைத்தே சிக்கிய வெளிநாட்டவர்கள்! தமிழக தேர்தலில் 25 பேர் கைது; விமான நிலையத்தில் அதிரடி சோதனை!

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத 25 வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த விவகாரத்தில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், விதிகளுக்குப் புறம்பாக ஓட்டுப் போட்ட இவர்களை, விரலில் இருந்த தேர்தல் ‘மை’ அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளது. இந்தியச் சட்டப்படி, வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்று அந்நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஆனால், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த தமிழகத் தேர்தலில், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை […]