சென்னை:
சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் சனாதனம் என்பது சமத்துவமின்மையைக் குறிக்கிறது; அதைத்தான் நாங்களும் எதிர்க்கிறோம்” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” எனக் கூறியது மீண்டும் தேசிய அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெக எப்போதும் சாதி முறைக்கும், சமுதாயப் படிநிலைக்கும் (Hierarchy system) எதிரானது. உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தில் உள்ள சாதி பாகுபாடு மற்றும் பெண்களை அடிமைப்படுத்தும் முறையையே எதிர்க்கிறார். அந்த வகையில் எங்களது கொள்கையும் அதுவே” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “வட இந்தியாவில் சனாதனம் என்றால் அது இந்து மதம் என்ற புரிதல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அதன் பொருள் வேறு. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல; அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்கிறோம். ஆனால், இந்துத்துவா என்ற பெயரில் மதத்தைத் திணிப்பதையும், மேலாதிக்கத்தையும் மட்டுமே எதிர்க்கிறோம். சமத்துவமே எங்களது அடிப்படை கொள்கை. இந்தப் புரிதல் வேறுபாட்டால்தான் தேவையற்ற சர்ச்சைகள் எழுகின்றன” எனத் தெளிவுபடுத்தினார். தவெக மற்றும் திமுக இடையே கொள்கை ரீதியாகப் பெரிய வேறுபாடு இல்லை என்ற அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
#AadhavArjuna #UdhayanidhiStalin #SanatanaDharma #VijayAsCM #TVK_Politics #BreakingNews #May14 #TamilNaduPolitics #SocialJustice #Equality #CasteEquality #TNAssembly #StalinVsVijay #DravidianIdeology #Secularism #ThalapathyVijay #NewGovernmentTN #TamilNews #PoliticalUnity #CM_Vijay_Official_“`