அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்வு – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (DA) 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் 2 சதவீத அகவிலைப்படி […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்திரி வெயில் காலத்தில் வெப்பம் தணியும் வகையில் இந்த மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சியால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய […]
“அதிமுக அலுவலகம் எங்களின் கோவில்; தூசி கூட பட விடமாட்டோம்!” – சி.வி.சண்முகம் பேட்டி!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், “நாங்கள் உண்மையான தொண்டர்கள் என்பதைச் சட்டப்படி நிரூபித்த பின்னரே அங்கு செல்வோம்” என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சி அலுவலகத்திற்குத் தாங்கள் வரப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். சி.வி. சண்முகம் பேசுகையில், “அதிமுக தலைமை அலுவலகம் எங்களின் கோவில் போன்றது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த அந்த இயக்கத்தின் மீது ஒரு தூசி படுவதைக் கூட […]
“ரூ.2,500 தருவதாகக் கூறிவிட்டு ரூ.1,000-ஐயும் இழுத்தடிப்பதா?” – முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, முதலமைச்சர் விஜய்யை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “மாதம் ரூ.2,500 தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, நடைமுறையில் உள்ள ரூ.1,000-ஐயும் வழங்காமல் இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 15-ஆம் தேதி பயனாளிகளின் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற […]
“EPS உட்பட 22 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்க!” – சபாநாயகரிடம் சி.விஜயபாஸ்கர் தரப்பு அதிரடி மனு!

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் சி. விஜயபாஸ்கர் தரப்பு மனு அளித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில், எஸ்பி வேலுமணி […]
திருச்சி கிழக்கு தொகுதி காலி! 6 மாதங்களில் இடைத்தேர்தல்; ஸ்டாலின் போட்டியா? – அரசியல் களத்தில் பரபரப்பு!

சென்னை: தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தத் தொகுதி காலியானதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 6 மாதங்களுக்குள் (நவம்பர் மாதத்திற்குள்) அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், சட்ட விதிகளின்படி திருச்சி கிழக்கு தொகுதி […]
“தோல்விக்கு நானே பொறுப்பு; ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லாதீங்க!” – திமுக மா.செக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்!

சென்னை: “தேர்தல் தோல்விக்குக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்கிறேன்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் சீரமைப்பு குறித்து அவர் விரிவாக உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர், “வெற்றி கிடைத்தால் அதன் பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்பதே நியாயம். யாரும் ஒருவர் மீது ஒருவர் பழி போட வேண்டாம். நடந்து முடிந்தது […]
“முன்கூட்டியே ஆர்டர் செய்த சோபா அது!” – விசிக அலுவலக சர்ச்சை குறித்து திருமாவளவன் விளக்கம்!

சென்னை: தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முடிவை விசிக அறிவிக்கத் தாமதமான நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் புதிய சோபாக்கள் வந்திறங்கியது பெரும் அரசியல் விவாதங்களைக் கிளப்பியது. “தவெக-வுடன் பேரம் பேசத்தான் இந்தத் தாமதம்” என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தற்போது விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதில் எங்களுக்கு எந்தத் தடுமாற்றமும் இருக்கவில்லை. இடதுசாரி கட்சிகளின் முடிவுக்காகக் காத்திருந்தோம், பின்னர் எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் […]
நானாட்டானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல், இன்று (14) மன்னார், நானாட்டான் பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், இன்று காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூரும் வகையில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கும் வீதியால் சென்ற பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் […]
சீரற்ற காலநிலை; புத்தளம் ரயில் சேவை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நிலவும் வெள்ளப்பெருக்கினால், புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள் சிலாபம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் ரயில் பாதையில் அமைந்துள்ள நீலாதி பகுதியில், பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதியில் வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளம் பாதையிலான ரயில் சேவைகள் புதன்கிழமை (13) மாலை முதல் வியாழக்கிழமை […]