யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட விவகாரம் சட்ட ஆலோசனைக்குச் செல்லும் நிலையில்!

யாழ் நகர மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத் தொகுதியின் நிர்வாக உரிமை தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் நோக்கில் சட்ட ஆலோசனை பெற யாழ்ப்பாண மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில், குறித்த விடயம் தொடர்பில் முதல்வர் திருமதி மதிவதனி அவர்கள் சட்ட ரீதியான ஆலோசனை பெறுவதற்கான அனுமதி கோரும் முன்மொழிவை […]

திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாக உரிமை யாழ்ப்பாண மாநகரசபைக்கே உரியது என்றும், அதன் ஆளுகையில் வெளிப்புற தலையீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வலியுறுத்தி யாழ்ப்பாண மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று மாநகர முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவர் உரையாற்றுகையில், யாழ்ப்பாண மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் நிதி […]

உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்தல்

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலைகள், தரம் மற்றும் அளவுகள் தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைமை அவசியம் என யாழ் மாநகர சபை உறுப்பினர் றீகன் இளங்கோ வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற நிலையில், இது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர், நகரிலுள்ள பல உணவகங்களில் உணவுகள் அளவுக்கு மீறிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி, […]

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை (14) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. சபை அமர்வின் முதல் நிகழ்வாக, முள்ளிவாய்க்கால் இன அழிப்பை சித்திரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டு, அதன் முன்னால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலியைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, அதன் பின்னர், […]

ஐயங்கேணியில் கைக்குண்டு மீட்பு

ஏறாவூர், ஐயங்கேணி பகுதியில் நீர் தேங்கி நிற்கும் இடமொன்றில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்காக வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவைப் பெற்று, குறித்த கைக்குண்டை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் காணாமல் போன 6.6 மில்லியன் டொலர் ஓமானில்?

ஆசிய நாடு ஒன்றில் இணையவழிக் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் டொலர் ரொக்கப் பணத்தை ஓமான் பொலிஸார் மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிதியை ஓமான் வங்கி ஒன்றிலிருந்து உள்ளூர் நாணயமாக மாற்ற முயன்ற நபர்களை ஓமான் பொலிஸ் திணைக்களம் தடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் இலங்கையைத் […]

கனடா கிரிக்கெட் வாரியத்தின் நிதியை முடக்கியது ஐசிசி: 6 மாத காலக்கெடு விதிப்பு

கனடா கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல், நிதி முறைகேடு மற்றும் ஆட்ட நிர்ணயச் சதி (Match-fixing) புகார்கள் குறித்து ‘The Fifth Estate’ நடத்திய புலனாய்வுத் தகவல்களைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அந்த அமைப்பிற்கான நிதியை முடக்கியுள்ளது. முக்கிய விபரங்கள்: நிதி முடக்கம்: கடந்த திங்கட்கிழமை ஐசிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனடா கிரிக்கெட் வாரியத்தின் மொத்த வருமானத்தில் 63% (சுமார் 3.6 மில்லியன் டாலர்கள்) ஐசிசி வழங்கும் நிதியாகும். நிபந்தனை: வாரியத்தில் உள்ள […]

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் […]

இலங்கையில் சீரற்ற வானிலையினால் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. முக்கிய விபரங்கள்: பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்: பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்கள்: பாதிக்கப்பட்ட மக்கள் 489 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சேத விபரங்கள்: தொடர்ச்சியான மழையினால் இதுவரை ஒரு மரணம் பதிவாகியுள்ளதுடன், 88 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ […]

மல்வானையில் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘உரிமையாளர் அற்ற’ காணியை ஆக்கிரமித்ததுபல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையது எனக் கூறப்படும் மல்வானையில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணியை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்தக் காணி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்களின் முக்கிய வாதங்கள்: உரிமையாளர் அற்ற காணி: ஆரம்பத்தில் இந்தக் காணிக்கு “உரிமையாளர் எவரும் இல்லை” என்று கூறப்பட்டதாகவும், பின்னரே இது அரசினால் கையகப்படுத்தப்பட்டதாகவும் மாணவர் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். பல்கலைக்கழகங்களின் இடப்பற்றாக்குறை: பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்தி முறைகேடாகப் […]