கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.05.2026நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
பருவப்பெயர்ச்சி மழைக்காலங்களில் பாலியாறு பெருக்கெடுத்து கல்விளான் பகுதியிலுள்ள குடியிருப்பிற்குள் வெள்ள நீர் உட்புகுவதால் அந்தப்பகுதியில் குடியிருக்கின்ற மக்கள் பலத்த பாதிப்புக்களுக்க முகங்கொடுத்துவந்தனர்.
இந்நிலையில் குறித்த வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுகின்ற கல்விளான் பகுதியைச் சேரந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் அந்த கல்விளான் பகுதியைச்சேர்ந்த குடியிருப்பாளர்களை வேறு இடங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது, அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளையும் பிரதேச செயலகம் மீளப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அந்த மக்களே அந்தக் காணிகளையும், வீடுகளையும் தொடர்ந்து பயன்படுத்த இடமளிக்கப்பட வேண்டும்.
அந்த கல்விளான் குடியிருப்பு அனர்த்த காலங்களில் குடியிருப்பதற்கு பொருத்தமற்ற இடம் என்பதற்காகவே, அந்த மக்களுக்களை வேறு இடங்களில் குடியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அங்கு அந்த மக்களால் நடப்பட்ட பலந்தரு நீண்டகாலப் பயிர்களும், அந்தமக்களுக்கான பொருளாதார வளங்களும் உள்ளன. அனவே அந்தக்காணிகளையும், வீடுகளையும் அந்த மக்களே பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப்படவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தினார்.
இந்நிலையில் துணுக்காய் பிரதேச செயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,
சுற்றுநிருபத்தின்படி அந்தமக்கள் ஏற்கனவே குடியிருக்கின்ற காணிகளிலுள்ள வீடுகள்ள இடித்ழிப்புச் செய்யப்படவேண்டும். மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியிருக்க முடியாது.
எனினும் தாங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. எம்மால் அந்த வீடுகளை உடைப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்படாது.
அவர்கள் அந்த வீடுகளையும், காணிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அத்தோடு அந்த மக்களுக்ளுக்கு புதிதாக வழங்கப்படுகின்ற காணிகளுக்கு பிரதேச செயலகத்தால் எதிர்காலத்தில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால் பழையவீட்டில் இருக்கும்போது அனர்த்தம் ஏற்பட்டு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்குரிய நிவரணங்கள் எவற்றையும் அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடுள்றது – என்றார்
gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்