திட்டமிடல் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் திட்டமிடல் மற்றும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று(14.05.2026) கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக மாநாட்டு மாவட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களது காணிகள், விவசாய நிலங்கள், அரச தேவைக்கான காணிகள் போன்றவற்றை குறித்த திணைக்களங்களிடமிருந்து அபிவிருத்தியின் பொருட்டு விடுவித்தல் தொடர்பாகவும் […]
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உணவகத்திற்கு கள வியஜம் மேற்கொண்ட எம்.பி

ழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 8 மாதங்களாக திறக்கப்படாமலிருந்த உணவகம் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம்(13) நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி குறித்த வைத்தியாசாலை உணவகத்திற்கு விஜயம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார். அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் உரியவர்களுடன் உரையாடலையும் மேற்கொண்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலை உணவகம் நீண்ட காலமாக திறக்கப்படாமல் மூடப்பட்டு காணப்பட்டது. குறித்த விடயம் வடமராட்சி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து […]
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மென்பொருள் ஒன்றை நிறுவும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இன்று ( 14) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மென்பொருள் தொகுதி (Software System) ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக 9.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டதாக சந்தேகநபர் […]
48 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் கடந்த பல மணி நேரங்களாக குறிப்பிட்ட இடத்திலேயே நிலை கொண்டிருப்பதனால் இலங்கையை விட்டு விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழையுடனான வானிலை அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னரே விலகும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதனால் இன்றும் இலங்கையின் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வட மத்திய கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று […]
திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி இல.538 வளநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் மல்லாவிவையை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னால் இலங்கை போக்குவரத்து சபையின் நடத்துனருமான திரு தம்பிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னையா, கணேசம்மா ஆகியோரின் […]
ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 14.05.2026 இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாட்டாளர்களில் ஒருவரான இராமலிங்கம் சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் செயற்பாடானது, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் […]
ஊர்காவற்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முதல் முறையாக பிரதேசமக்கள் தமது சுய பிரயத்தனத்தினால் , முள்ளிவாய்க்கால் படுகொலைகள் – இனஅழிப்பு மற்றும் தொடரும் தேசிய இன ஒடுக்குமுறையை நினைவு கொள்ளும் விதமாகா முள்ளிவாய்க்கால் உரிமை கஞ்சி நிகழ்வை , புனித சூசையப்பர் ஆலயத்துக்கு முன்னால் ஒழுங்கு செய்திருந்தார்கள். பிரதேசசபை துணைத்தலைவர் லெனின் ரஞ்சித், பிரதேசசபை தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, தீவக மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி இளம்பிறையன் , போன்றவர்களும் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வை, கத்தோலிக்க திருச்சபையின் கன்னியர் சபை துறவி […]
மென்பொருள் மோசடி: குடிவரவு திணைக்கள தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் கைது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையை அடுத்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் பின்னணி: மோசடி விபரம்: ஒரு மென்பொருள் அமைப்பை (Software System) நடைமுறைப்படுத்துவதற்காக 9.8 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவிடப்பட்டதாக சந்தேக நபர் எழுத்துப்பூர்வமான பிரகடனம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். விசாரணை முடிவு: இருப்பினும், அவ்வாறான மென்பொருள் அமைப்பு எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சட்ட நடவடிக்கை: குற்றச்சாட்டு: பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் (Public Property Act) […]
பிக்குவால் சிறுமி துஷ்பிரயோகம்: 22ஆம் திகதி வரை பிக்குவுகடகு விளக்கமறியல்!

15 வயது சிறுமி ஒருவரை தவறானமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அத்தமஸ்தானத்தின் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரரை, வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நேற்று (13) உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வழங்குவதற்கு முன்னர், நீதிபதி நவாலொக்க மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் தேரோவின் உடல்நிலையை பரிசோதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றுமுன்தினம் […]
பெறுமதிமிக்க பொருட்களை திருடிய இளம் கணவன் மனைவி கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீட்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளம் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மனின் ஆலோசனையிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விநாயகபுரம் பகுதியில் வைத்து 24 வயதுடைய கணவரும், 20 […]