டொராண்டோ போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீது ‘ஒழுக்கக்கேடு’ குற்றச்சாட்டு: பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு விசாரணை

டொராண்டோ பொலிஸ் சேவையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த (Drug Squad) அடையாளம் தெரியாத சில அதிகாரிகள் மீதான ஒழுக்கக்கேடான நடத்தைகள் குறித்து, ஒன்டாரியோவின் சட்ட அமலாக்கப் புகார்கள் நிறுவனம் (LECA) விசாரணை நடத்தவுள்ளது. ஒன்டாரியோவில் பொலிஸாரின் நடத்தை குறித்த பொதுப் புகார்களை விசாரிக்கும் இந்தச் சுதந்திரமான சிவில் அமைப்பு, திங்கட்கிழமை அன்று இதனை உறுதிப்படுத்தியது. டொராண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி மைரோன் டெம்கிவ் (Myron Demkiw), தனது படையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உறுப்பினர்களின் […]
ஏரி ஏரியில் (Lake Erie) சிறுவன் மற்றும் பெரியவர் சடலமாக மீட்பு

கனடாவின் ஏரி ஏரி (Lake Erie) பகுதியில் படகு சவாரிக்குச் சென்று காணாமல் போனவர்களைத் தேடும் பணியின் போது, 7 வயது சிறுவன் மற்றும் 53 வயதுடைய நபர் ஒருவரது சடலங்கள் திங்கட்கிழமை மீட்கப்பட்டதாக நோர்போக் கவுண்டி (Norfolk County) ஒன்டாரியோ மாகாண பொலிஸார் (OPP) தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி: படகு சவாரிக்குச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராதது குறித்து மாலை 3:45 மணியளவில் அவசரப்பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து […]
ஓஷாவா டிம் ஹார்டன்ஸ் (Tim Hortons) உணவகத்திற்கு வெளியே வாலிபர் கொலை: பிராம்ப்டனைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

கடந்த வார இறுதியில் ஓஷாவாவில் உள்ள கோப்பி விற்பனை நிலையத்திற்கு வெளியே இடம்பெற்ற மோதலில் 23 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பிராம்ப்டனைச் (Brampton) சேர்ந்த 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 8:10 மணியளவில் சிம்கோ ஸ்ட்ரீட் நோர்த் (Simcoe Street North) மற்றும் வின்செஸ்டர் ரோட் ஈஸ்ட் (Winchester Road East) பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் அந்தப் பகுதியில் […]
அமரகீர்த்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி உயிரிழப்பு

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று (11) கட்டடத்திலிருந்து தவறி விழுந்து கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கம்பஹா – பசியால பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் ‘எல்’ வார்டின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது […]
தமிழக முதலமைச்சர் விஜய் உச்சகட்ட பாதுகாப்பில்…

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பில் இருந்து உச்சக்கட்ட பாதுகாப்பான Z+ பிரிவு அதிகரிப்பட்டுள்ளது. அதன்படி, 55 மத்திய பாதுகாப்புப் படையினர் கொண்ட குழு அவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதில் என்.எஸ்.ஜி கமாண்டோக்கள், ஒரு குண்டு துளைக்காத வாகனம் மற்றும் ஒரு பைலட் காரும் அடங்குகின்றன. இந்தப் பாதுகாப்புப் படையின் அனைத்து உறுப்பினர்களும் அதிநவீன MP5 சப்மெஷின் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்தியிருப்பார்கள். […]
முன்னெடுக்கப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பு
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை தற்போதைய அரசாங்கம் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி கடந்த கால ஆட்சியாளர்களின் தோல்வியுற்ற திட்டங்களையே மீண்டும் திணிக்க முயற்சிக்கிறது. பழைய பாடத்திட்டத்தால் 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு […]
அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது!

சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் யார் என்பதில் பொதுச் செயலாளர் பழனிசாமி – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ளது. குழுத் தலைவர் பதவி கோரி இரு தரப்பினரும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தனித்தனியே சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், […]
மகிந்த ராஜபக்ச இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று(12) காலை 9 மணியளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்துக்கமைய மகிந்த ராஜபக்சவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மனோஜ் கமகே, “கபில சந்திரசேன தாம் வழங்கிய வாக்குமூலமானது அச்சுறுத்தல் மற்றும் பலவந்தத்தின் பேரில் பெறப்பட்டது […]
பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த படுவத்தே சாமர வழிநடத்திய சதித்திட்டங்கள் அம்பலம்

கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கி வழங்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ‘படுவத்தே சாமர’ என்ற மனோஜ் சுரங்க லியனகே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அஜர்பைஜானில் மறைந்திருந்த போது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டார். நீண்டகாலமாக டுபாயில் மறைந்திருந்து, சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அஜர்பைஜானுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 07 ஆம் திகதி அந்நாட்டு குடிவரவு சட்டங்களை மீறியமைக்காகவும், தனது […]
ரூ.23,000 மில்லியன் மதிப்பிலான சமூக சக்தி தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை

நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்திற்காக 2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 25,000 மில்லியன் ரூபாய் நிதியில், இதுவரை 23,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாழ்வாதார அபிவிருத்தி, உற்பத்திப் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய, சமூக அபிவிருத்தி சபைகளினால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்காகவே இந்த நிதி ஒதுக்கீடு […]