நீர்த்தேக்கத்தில் பாரிய மீன் அறுவடை

இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடவலவ நீர்த்தேக்கத்தில் கடந்த மே 09 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் மாத்திரம் 35,000 கிலோகிராமிற்கும் அதிகமான (35,469 kg) பாரிய மீன் அறுவடை கிடைத்துள்ளதாக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) அறிவித்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட இந்த மீன்களின் மொத்தப் பெறுமதி ஒரு கோடியே ஒன்பது இலட்சத்து ஒன்பதாயிரத்து முன்னூற்று தொண்ணூற்று மூன்று ரூபா (ரூபா 10,909,393/=) ஆகும். பலங்கொடை […]