கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று (11) கட்டடத்திலிருந்து தவறி விழுந்து கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கம்பஹா – பசியால பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் ‘எல்’ வார்டின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது மேல்முறையீட்டு கைதியாகவே இருப்பதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறையில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்த கைதி ஒருவர் உயிரிழந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்குத் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டடமொன்றிலிருந்து விழுந்து அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதினையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சஹன் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி, ரசந்த கொடவெல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது 12 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
மேலும் 04 குற்றவாளிகளுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.