“ஆளுநர் மாளிகை கைப்பாவையாகச் செயல்படுகிறது!” – தமிழக ஆளுநரைக் கண்டித்துக் காங்கிரஸ் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. தவெக-விற்குத் தங்களது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை ஏற்கனவே வழங்கியுள்ள காங்கிரஸ், ஆளுநரின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது எனக் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் ஆ.கோபண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய […]

“திமுக – அதிமுக ரகசியத் திட்டம் மக்களுக்கு எதிரானது!” – தவெக நிர்வாகி அருண் ராஜ் ஆவேசம்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவக் கட்சிகளும் ரகசியமாகக் கைகோர்க்க முயல்வதாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண் ராஜ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்திற்கும், மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கும் எதிரானது என அவர் சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அருண் ராஜ், “தமிழக மக்கள் இந்த அரசியல் கூத்துகளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி […]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி சடலமாக மீட்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறி, பொருத்தமற்ற பிணையாளர்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகமவினால் சந்திரசேனவைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மறுநாளே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சந்திரசேனவுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்துச் செய்து, வழக்கு விசாரணை முடிவடையும் […]

ஆளுநரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்?

தனித்தே நின்று 108 இடங்​களை வென்​றும் ஆட்​சிக் கட்​டிலில் அமர முடி​யாமல் அல்​லாடிக் கொண்​டிருக்​கிறார் விஜய். எனினும் அறு​திப் பெரும்​பான்​மைக்கு மிக அரு​கில் நிற்​ப​தால் எப்​படி​யும் விஜய் தமிழக முதல்​வ​ரா​வார் என தவெக-​வினர் நம்​பு​கிறார்​கள். இதற்கு நடு​வே, அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக நிபந்​தனையற்ற ஆதரவை வழங்க முன்​வந்​திருப்​ப​தாக​வும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி இன்று ஆளுநரை சந்​தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்​றும் தகவல்​கள் தடதடக்​கின்​றன. திமுக-வை எதிர்த்​தும் விமர்​சித்​தும் மட்​டுமே ஆட்​சி​யைப் பிடித்த இயக்​கம் […]

விஜய் பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது…

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கட்டாயம் தேவை என்பதை ஆளுநர் மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், விஜய் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற […]

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உலகளாவிய வரி விதிப்பு நியாயமற்றதாக வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அண்மையில் விதிக்கப்பட்ட 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அமெரிக்க ஜனாதிபதியின் இறக்குமதி வரி உத்திக்கு அமெரிக்க மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1970-களின் வர்த்தகச் சட்டத்தின் கீழ், அவர் அண்மையில் விதித்த 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இதன் பலன் இரண்டு தனியார் இறக்குமதியாளர்களுக்கும் மற்றும் வொஷிங்டன் மாகாணத்திற்கும் மட்டுமே பொருந்தும் […]

மலையகத்தில் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம்

பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பசறை, ஹாலி-எல, லுணுகலை, வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து: மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால், சில பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாகப் பல பகுதிகளுக்கான போக்குவரத்துச் சேவைகள் […]

போதைப்பொருள் அச்சுறுத்தல்; முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்கவும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டு சபையில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை நேற்று (07) முற்பகல் ஜனாதிபதி […]

நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்கள் கைது

வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி, இணையம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை பொலிஸார் நேற்று(07) கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்த போதே, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இரண்டு யுவதிகள் உட்பட 21 சீனர்கள் மற்றும் ஒரு யுவதி உட்பட 9 வியட்நாமியர்கள் அடங்குவதாக பொலிஸார் கூறினர். சந்தேக நபர்களிடமிருந்து 10 […]

நாட்டின் தனிநபர் வருமானம் 5000 டொலர்களை தாண்டியது

இலங்கையின் தனிநபர் வருமானம் வரலாற்றில் முதல்முறையாக 5000 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். நேற்று(07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். “பல தசாப்தங்களாக இந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அமைச்சுகளை நிர்வகித்து, நாட்டை அழித்து வங்குரோத்தடைய செய்த ஒரு நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம். இப்போது அவர்கள் வந்து எமக்கு முன்னேற்ற அறிக்கை குறித்தும், ‘எல் – போர்டு’ (L-Board) அரசாங்கம் குறித்தும் அறிவுரை கூறுகிறார்கள். அவர்களின் […]