அனுர அணியின் முக்கிய புள்ளி இராஜினாமா

குருநாகல் மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மாநகர சபைக்குள் நிலவும் ஊழல், நிர்வாகத் தோல்விகள் மற்றும் முறையற்ற ஆட்சி நிர்வாகம் குறித்த விரக்தியினால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இராஜினாமா செய்தியை உறுதிப்படுத்திய குருநாகல் மேயர் ஆனந்த சஹபந்து, இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்தார். பிரேமச்சந்திர தனது தேர்தல் பிரிவான கன்கொட பிரிவில் (பிரிவு […]
இணையத்தில் பொலிஸ் பணத்தில் சூதாடிய கான்ஸ்டபிள் கைது

கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பிரிவில் இருந்த 35 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்று, அதனை கொண்டு இணையத்தில் சூதாட்டத்தில் (Online Gambling) ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்ற புலனாய்வு பணியகத்துடன் இணைக்கப்பட்ட நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வு பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, குற்றங்கள் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா […]
நாகரீகமற்ற முறையில் சிகை அலங்காரம்; பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம் குறித்து கலந்துரையாடல்

நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிபுணர்களுக்கும் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (7) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் பிரதானமாக பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கார நடைமுறைகள் மற்றும் சேவைக் கட்டணக் கட்டுப்பாடு ஆகிய இரு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் சினிமா நடிகர்களைப் பின்பற்றி விசித்திரமான முறையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக தவிசாளர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சிகை அலங்காரங்கள் மாணவர்களிடையே ஒழுக்கமின்மையை […]
“விஜய்யைப் பதவியேற்க அழைக்க வேண்டும்!” – திண்டுக்கல்லில் பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம்; போலீஸ் அதிரடி கைது!

திண்டுக்கல்: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திண்டுக்கல்லில் மூன்று பெண் தொண்டர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனவும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சரண்யா மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்ணான வளர்மதி […]
இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை?

முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவாக வழங்கப்படும் என கடந்த மாதம் வெகுசன ஊடக பிரதியமைச்சரால் தம்மிடம் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (07.05.2026) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டார். இத்தகைய சூழலில் முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை […]
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.20% பேர் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95.20 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வை சுமார் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97% பேரும், மாணவர்கள் 93.19% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மரணம் சந்தேகத்திற்கிடமானது: கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் திடீர் மரணம் குறித்து நீதித்துறை விசாரணையை மேற்கொள்வதற்காக நீதவான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறியதை அடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டன. கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்கிடமானதாகத் தோன்றுவதாகவும், எனவே இது குறித்து சட்ட மருத்துவ அதிகாரியின் (JMO) பிரேதப் பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை அவசியம் என்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று கோட்டை நீதவான் பாசான் அமரசேனவிடம் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது […]
வெளிநாட்டவர்கள் இருவர் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் கைது
காலி – டிக்சன் வீதி பகுதியில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரே கைதாகியுள்ளதாக தெரியவருகிறது. மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர், உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த இருவரும் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பதற்காக 400 அமெரிக்க டொலர் (இலங்கை பெறுமதியில் சுமார் 128,000 ரூபா) பெறுமதியான போலி நாணயத்தாள்களை வழங்கியுள்ளனர். […]
இந்தோனேசியாவின் டூகோனோ எரிமலை வெடிப்பு: சிக்கிக்கொண்ட மலையேற்றப் பயணிகள் மீட்புப் பணி தீவிரம்

இந்தோனேசியாவின் டூகோனோ (Mount Dukono) எரிமலை இன்று காலை வெடித்ததைத் தொடர்ந்து, அதில் சிக்கியுள்ள குறைந்தது 20 மலையேற்றப் பயணிகளை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். முக்கிய தகவல்கள்: பாதிக்கப்பட்டவர்கள்: மலையேற்றப் பயணிகளில் பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள் என நம்பப்படுகிறது; இவர்களில் குறைந்தது ஒன்பது பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். உயிரிழப்புகள்: மலையேற்றப் பயணிகளில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுவரை உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை. எரிமலை […]
இன்று வெளியாகும் மெகா முடிவு! தவெக எம்.எல்.ஏ-க்கள் அவசரக் கூட்டம்

சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழலில், இன்று காலை 9 மணிக்குச் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-விற்கு, காங்கிரஸ் அளித்த 5 இடங்களையும் சேர்த்து (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதால்) தற்போது 112 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான ‘மேஜிக் எண்’ 118-ஐ எட்ட இன்னும் 6 இடங்கள் […]