இலங்கையர்களின் உயிரியல் தரவுகள் கறுப்புப் பட்டியலில் உள்ள வெளிநாட்டு நிறுவனத்திடம்?

இலங்கையர்களின் உயிரியல் தரவுகளை கொண்ட டிஜிட்டல் அடையாள அட்டையை தயாரிக்கும் விலை மனுக்கோரல் கறுப்புப் பட்டியலில் உள்ள வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் சர்வதேச தரவு கடத்தல் இடம்பெற வாய்ப்புள்ளதாக தேசிய தொழிற்சங்க மற்றும் சிவில் முன்னணியின் அழைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை வலியுறுத்தினார். “டிஜிட்டல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் செயல்முறையை இந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதன் மூலம், இலங்கை மக்களின் இரத்த […]

“விஜய்யைத் தடுக்க ஒன்று சேர்ந்த எதிரிகள்!” – திமுக, அதிமுக ரகசிய உறவை விளாசும் மாணிக்கம் தாகூர்!

சென்னை: தமிழக அரசியலில் நிலவும் அசாதாரணச் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதைத் தடுக்கவே, பரம்பரை எதிரிகளான இந்த இரு கட்சிகளும் ஒரே இரவில் ஒன்றிணைந்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்நாள் எதிரிகளாக இருந்த இரு […]

“விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வை!” – ஆளுநர் மாளிகை முன் தவெக நிர்வாகிகள் அதிரடி முழக்கம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய வேளையில், ஆளுநர் மாளிகையின் முன்பாகத் தவெக நிர்வாகிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூரைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் இருவர், “விஜய்க்கு உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்” என வலியுறுத்திப் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். அந்தப் பதாகைகளில், “ஆளுநரே… அரசியல் விளையாட்டு விளையாடாதே! விஜய்க்குப் பதவிப்பிரமாணம் செய்து வை!” என வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆளுநர் […]

“இறைவன் அருளால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்!” – தம்பிதுரை எம்பி அதிரடிப் பேட்டி!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு இடையே, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் விருப்பத்தின்படி உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும் எனத் தெரிவித்தார். தவெக 108 இடங்களைப் பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி, […]

“10 கோடி கொடுத்தாலும் விஜய்யை விட்டுக்கொடுக்காதீர்கள்!” – தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உருக்கம்!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கத் தவெக போராடி வரும் சூழலில், அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எவ்வித ஆசைக்கும் இணங்கிவிடக் கூடாது எனப் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், குதிரை பேர முயற்சிகளை முறியடிக்க வேண்டும் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் பேசிய என்.ஆனந்த், “யாராவது உங்கள் முன்பு 10 கோடி ரூபாயை வைத்துப் பேரம் பேசினாலும், அதற்கு மயங்கி விடாதீர்கள். ஒரு […]

“விஜய்க்கு முதல்வர் பாதுகாப்பு தந்தது எப்படி?” – டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கடும் அதிருப்தி!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு முதலமைச்சருக்குரிய பாதுகாப்பு மற்றும் கான்வாய் வசதிகள் வழங்கப்பட்டது குறித்துத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிரடி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தமிழகத் தலைமைச் செயலாளர் சிவ்குமார் மற்றும் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில், ஆளுநரைச் சந்தித்து ஆலோசிப்பதற்கு முன்பே அதிகாரிகள் எப்படி விஜய்க்கு முதலமைச்சருக்குரிய வசதிகளைச் […]

“பாஜக நிழலாகச் செயல்படும் ஆளுநர்!” – எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பைச் சுட்டிக்காட்டி வேல்முருகன் ஆவேசம்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காதது ஜனநாயகப் படுகொலை எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக-வின் நிழலாக ஆளுநர் செயல்படக் கூடாது என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். வேல்முருகன் தனது பதிவில், “1994-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க எஸ்.ஆர். பொம்மை வழக்கின் […]

“செங்கோட்டையன் பேச்சைக் கேட்காததே பின்னடைவு!” – ஆளுநரிடம் விஜய் சிக்கியது எப்படி? பகீர் பின்னணி!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நீடித்து வரும் சிக்கல்களுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனின் ஆலோசனையை விஜய் ஏற்காததே காரணம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது. 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க உரிமை கோரிய போது செய்த ஒரு நுட்பமான அரசியல் தவறு தற்போது விஜய்க்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அரசியலில் 10 முறை எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்த அனுபவம் கொண்ட […]

கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் கபில சந்திரசேன சடலமாக மீட்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, வெள்ளிக்கிழமை அதிகாலை கொள்ளுப்பிட்டியிலுள்ள  இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொள்ளுப்பிட்டி, பெட்ரிஸ் பிளேஸில் (Pedris Place) அமைந்துள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டிலேயே சந்திரசேனவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அரவிந்த டி சில்வா, சந்திரசேனவின் மைத்துனர் (மனைவியின் சகோதரியின் கணவர்) ஆவார். கபில சந்திரசேன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகிய இருவரும் […]

உடவலவ சரணாலயத்திற்குள் கஞ்சா சேனை முற்றுகை : மூவர் கைது

உடவலவ சரணாலயத்திற்குள் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில், மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஹம்பேகமுவ பொலிஸார் மற்றும் இலங்கை விமானப்படையின் ட்ரோன் (Drone) கேமரா வழிநடத்தல் பிரிவினர் இணைந்து இந்த சோதனையை முன்னெடுத்தனர். கால் ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரையிலான பரப்பளவில் அமைந்திருந்த இந்தத் தோட்டங்களில் இருந்து, மூன்றரை அடி முதல் ஐந்து அடி வரை உயரமான மூன்று லட்சத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ட்ரோன் […]