மட்டக்களப்பு மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மாநகரசபை உறுப்பினர்கள் கறுத்தப்பட்டியணிந்து சபைக்கு சமூகம் தந்து ஈகச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் சபையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற வகையில் நேற்றைய நாளில் மாநகரசபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து வருகை தருவதுடன் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்துமாறு மாநகரசபை முதல்வர் கோரிக்கை விடுத்தார். […]
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து திருட்டு; மூவர் கைது
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் கடந்த 06 ஆம் திகதி அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரித கெதியில் விசாரணைகளை மேற்கொண்ட […]
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் இலங்கை – வியட்நாம் இடையே உடன்படிக்கை

இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக இன்று (08) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை இலங்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் இத்துறை சார்ந்து கையெழுத்திடப்பட்ட முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனவும், வியட்நாம் அரசாங்கத்தின் சார்பாக அந்நாட்டின் […]
சூரிய ஒளியினால் புற்று நோய் ஏற்படக்கூடிய ஆபத்து?

சூரிய ஒளியின் காரணமாக புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான நிபுணத்துவ மருத்துவர் ஹசந்தி லாலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முற்பகல் 10 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப் பகுதியில் உடலில் சூரிய ஒளி நேரடியாக படுவதனால் புற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சூரிய ஒளி நேரடியாக படுவதனை தவிர்க்க உரிய ஆடைகளை […]
பணமோசடி தடுப்பு; யோஷிதவின் வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

பணமோசடி தடுப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் மீதான உத்தரவு, எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) அறிவித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போது யோஷித ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் […]
“வெற்றிக் கனியைச் சுவைத்த தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துகள்!” – பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் நெஞ்சார்ந்த வாழ்த்து!

சென்னை: தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ள சூழலில், மாணவர்களின் எதிர்காலம் பிரகாசிக்க வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்பு […]
“காங்கிரஸ் இறுதியில் அவமானத்தையே சந்திக்கும்!” – தவெக ஆதரவு விவகாரத்தில் பாஜக கடும் தாக்கு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸின் இந்த அரசியல் நகர்வை பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் கடுமையாகச் சாடியுள்ளார். “காங்கிரஸ் இறுதியில் அவமானத்தையே சந்திக்கும்” என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட விசிக மற்றும் இடதுசாரிக் […]
“பெரும்பான்மையைச் சோதிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே!” – கர்நாடக கடிதத்தைக் காட்டி ஆளுநருக்கு கிரிஷ் சோடங்கர் அறிவுறுத்தல்!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு இடையே, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஆளுநர் அர்லேகரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். 2018-ம் ஆண்டு கர்நாடக ஆளுநர் பாஜக-வை ஆட்சி அமைக்க அழைத்த கடிதத்தை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அரசியலமைப்பு மரபுகளை ஆளுநர் மீறக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநர் அர்லேகர் அவர்களே, 2018-ல் கர்நாடக ஆளுநர் அனுப்பிய இந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். அன்று தனிப்பெரும் கட்சி […]
தவெக-விற்கு ஆதரவா? திருமாவளவன் தலைமையில் இன்று மாலை விசிக அவசர ஆலோசனைக் கூட்டம்!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் முட்டுக்கட்டைக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று மாலை முக்கிய முடிவெடுக்க உள்ளது. சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் தவெக-வின் ஆதரவு கோரிக்கை குறித்து ஆலோசிக்க இன்று மாலை விசிக […]
“திமுக – அதிமுக கூட்டணியா?” – ஆதாரமற்ற செய்திகளுக்குக் கனிமொழி எம்.பி. முற்றுப்புள்ளி!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயகத்தில் மக்கள் அளித்த தீர்ப்பே இறுதியானது என்றும், அதை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதேவேளையில், […]