சர்ரேயில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் மீது குற்றச்சாட்டு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்ரே (Surrey) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்ரே பொலிஸ் சேவை (SPS) தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 13, 2026 அன்று அதிகாலை 2:52 மணியளவில், 94A அவென்யூ (94A Avenue) மற்றும் 127 வீதி (127 Street) சந்திப்புக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆட்கள் இருந்த […]
ஆள் கடத்தல் விசாரணை: பிராம்ப்டன் நபர் மீது குற்றச்சாட்டு

பீல் பிராந்திய பொலிஸாரின் (Peel Regional Police) ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், பிராம்ப்டனைச் சேர்ந்த ஒருவர் மீது ஆள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம், பெண் ஒருவர் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணையாளர்களின் தகவல்படி, 2025 அக்டோபர் முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில், 23 வயதுடைய கபீர் ஜங்ரா (Kabir Jangra) என்பவர், பாதிக்கப்பட்ட பெண்ணைத் தந்திரமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அத்துடன், […]
பிராம்ப்டன் பொழுதுபோக்கு மையத்தில் அநாகரீகமான செயல்: ஒருவர் கைது

பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police), பிராம்ப்டனில் உள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் சிறுவன் ஒருவருடன் தொடர்புடைய அநாகரீகமான செயல் (Indecent act) குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், இதில் பாதிக்கப்பட்ட வேறு யாராவது இருக்கிறார்களா என்பது குறித்தும் தேடி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 26-ஆம் திகதி, டிக்சி வீதி (Dixie Road) மற்றும் பால்மோரல் டிரைவ் (Balmoral Drive) பகுதிக்கு அருகிலுள்ள பொழுதுபோக்கு மையம் ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையாளர்களின் […]
குடியேற்றம் மற்றும் குடியுரிமை மோசடிகளைக் கட்டுப்படுத்த கனடா புதிய சீர்திருத்தங்களை அறிவிப்பு

கனடாவில் குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மேற்பார்வைச் சீர்திருத்தங்களை (Oversight reforms) அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கனடிய குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தின் (IRCC) தகவலின்படி, இந்த மாற்றங்கள் குடியேற்றம் மற்றும் குடியுரிமை ஆலோசனைகளைப் பெறுபவர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தவும், உரிமம் பெற்ற ஆலோசகர்களின் பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் “நேர்மையான மற்றும் நம்பகமான” ஆலோசனைகளைப் பெறுவதை உறுதி செய்யவும், அமைப்பிற்குள் நேர்மையைப் பேணவும் இந்தச் சீர்திருத்தங்கள் உதவும் என […]
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனுவை முன்னெடுத்துச் செல்வதற்குள்ள சட்டப்பூர்வத் தன்மை குறித்து ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றிற்குத் தெரிவித்தார். மனுதாரரான சுரேஷ் சலே […]
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை விஜயம்

ரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) இலங்கையை வந்தடைந்தார். அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மும்பையிலிருந்து வியட்நாம் எயார்லைன்ஸிற்கு சொந்தமான VN-1 என்ற விமானம் மூலம் வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மீண்டும் ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்!

ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கப்பல்களை இலக்கு வைத்தும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியும் அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகம் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் ஜஸ்க் கடலோரப் பகுதியிலிருந்து ஹோர்முஸ் நீரிணை நோக்கிச் சென்ற ஈரானிய எண்ணெய் கப்பலையும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே நீரிணைக்குள் நுழைந்த மற்றொரு கப்பலையும் அமெரிக்கா குறிவைத்ததாக ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்கப் […]
தமிழ்நாட்டில் விஜய் அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்வதால் இலங்கையின் அபிவிருத்திகளுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் விஜய்யின் அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக்கொள்வதால் இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் ஒரு பங்கை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும் என்று நம்புகிறேன் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதற்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். இதற்கு உறுதுணையாகவுள்ள செங்கோட்டையன் தொடர்பிலும் கூற வேண்டும். செங்கோட்டையன் 2018ஆம் ஆண்டில் […]
வணிக வளாகத்துக்குள் 13 இலட்சம் ரூபா திருட்டு!

தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றினுள் கூர்மையான ஆயுதங்களுடன் புகுந்த 6 பெண்கள் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர், அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி சுமார் 13 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 4ஆம் திகதி மாலை 6.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் குறித்த வணிக வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர். தாம் ஒரு தொலைக்காட்சியை விலைக்கு வாங்கப் போவதாகக் கூறி, அதற்காக 45 ஆயிரம் ரூபா […]
அவசரகால சட்டத்தை பயன்படுத்தி எவரையும் நாம் கைது செய்யவில்லை- நீதியமைச்சர்

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பற்றி எவரும் குறிப்பிடவில்லை. வழக்கு எண் மற்றும் வழக்கு தினம் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுவானதொரு விடயமாகும். வழக்கின் தீர்ப்பு என்னவென்பது எமக்கு தெரியாது. நீதிமன்றமே அறியும். ஆனால் குறித்த வழக்குடன் தொடர்புடைய நபர் நன்கு அறிவார். அதனால் தான் தற்போது திணறுகிறார்கள்.போலியான விடயங்களை முன்வைக்கிறார்கள் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளையின் கீழான அவசரகால சட்டத்தை […]