தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. செபஸ்தி நிஷான் அவர்கள் இன்றைய தினம் (06.05.2026) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் இன்றைய தினம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

யாழ் புங்குடுதீவில் சொகுசு பஸ்சுடன் மோதி விபத்து! ஒருவர் சிதறிப் பலி!

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி கடற்படை முகாம் அருகிலுள்ள பாலம் வழியாக பயணித்த சுற்றுலா பேருந்தும், புங்குடுதீவிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன

மட்டு மாவட்ட வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அரசு நிதி ஒதுக்கீடுகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆறு மல்வத்து ஓயாவா? மாதுரு ஓயாவா என தெரியாவதர்கள் எல்லாம் மட்டக்களப்பின் அபிவிருத்தியைப் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் 44 ஆவது விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களிலே என்னால் சில அபிவிருத்தி பணிக்கள் இந்த மைதானத்திற்கு […]

ஈரான் உடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்படும் நிலையில் -வெள்ளை மாளிகை –

– ஈரானுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) எட்டுவதற்கு மிக நெருக்கமான நிலையில் தாங்கள் இருப்பதாக வெள்ளை மாளிகை நம்புவதாக ‘அக்சியோஸ்’ (Axios) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த, பெயரிடப்படாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் இரு வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 14 அம்சங்களைக் கொண்ட ஒரு பக்கக் குறிப்பு (Memo) […]

நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரம் தலையிடுவதாகக் கூறப்படும் விவகாரம்: விவாதத்தைக் கோருகிறது எதிர்க்கட்சி

நீதித்துறையின் சுதந்திரத்தில் நிறைவேற்று அதிகாரம் அத்துமீறித் தலையிடுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர். இந்தப் பிரேரணை இன்று (06) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க, பிரதி கோலாசான்களான ஜே.சி. அலவத்துவல மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோருடன் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இதனைச் சமர்ப்பித்தனர். எதிர்க்கட்சித் தலைவரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு வருகிறது

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை ஜூன் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதியரசர் ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (6ஆம் திகதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆய்வு செய்த நீதியரசர், விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் இரண்டு வாரங்களுக்குள் பிரதிவாதித் தரப்பிற்கு வழங்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். […]

வித்தியா படுகொலை வழக்கு: சுவிஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களில் ‘சுவிஸ் குமார்’ என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் மற்றும் மூவர் அடங்குவர். இவர்களது இந்தக் கொடூரக் செயல் அக்காலப்பகுதியில் நாடு முழுவதும் பெரும் பொதுமக்களின் ஆத்திரத்தையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக, மூன்று […]

அரசு அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை: மல்லிகைத்தீவு வீதியை தாமே செப்பனிடும் கிராம மக்கள்

அரசினால் அபிவிருத்தி நடைபெறும் என பலவருடமாக காத்திருந்து எமாந்த மேன்காமம் கிராம மக்கள் தமது வீதியை தாமே செப்பனிட்டு வருகின்றனர். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் – மல்லிகைத்தீவு பிரதான வீதியின் சிறு பகுதியானது பல வருடகாலமாக செப்பனிடப்படாத நிலையில் குன்றும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டு வருகின்றது. இதனை செப்பனிட்டுத் தருமாறு பல வருடகாலமாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த கிராம மக்கள் இறுதியாக தமது சொந்த நிதியை பயன்படுத்தி வீதியை செப்பனிடும் […]

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து

கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்ததுடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் எமது மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும் வழங்கிய பேராதரவும் எமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. அன்று எமது மக்களின் துயர்துடைக்க எவ்வாறெல்லாம் தமிழ்நாடு துணை நின்றதோ, அதே போன்றதொரு உறுதியான ஆதரவை உங்களிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான […]

ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பு

ஐசிசி டி20 தரவரிசை​யில் இந்​திய கிரிக்கெட் அணி நம்​பர் ஒன் இடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது. சர்​வ​தேச டி 20 அணி​கள் தரவரிசை பட்​டியலை ஐசிசி வெளியிட்டுள்​ளது. இதில் 3 முறை சாம்​பிய​னான இந்​திய அணி முதலிடத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது. கடந்த மார்ச் மாதம் நடை​பெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி சாம்பியன் பட்​டம் வென்​றிருந்​தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் சாம்​பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்ட முதல் அணி என்ற […]