ரோமானிய பாராளுமன்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசு கவிழ்ந்தது

ரோமானிய பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், பிரதமர் இலி போலோஜன் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. இந்த அரசியல் குழப்பம் நாட்டின் இறையாண்மை கடன் மதிப்பீடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவி மற்றும் நாட்டின் நாணயத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தின் 330 உறுப்பினர்களில், அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 281 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தீவிர […]

துப்பாக்கிச் சூட்டில் மதகுரு உயிரிழப்பு; பாகிஸ்தானில் சம்பவம்

பாகிஸ்தானில் இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் அந்நாட்டின் முக்கிய மதகுருவான மௌலானா முகமது இத்ரீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சர்சத்தா மாவட்டத்தில் உட்மான்சாய் என்ற பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் பாதுகாப்போடு குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டத்தில் மதகுரு […]

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தமது கட்சி முழுமையான ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியினர் 5 பேரும் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மதவாத சக்திகளை கூட்டணியில் அனுமதிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சியானது த.வெ.கவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சி, தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தமது முதுகில் […]

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு முக்கிய அழைப்பு

உள்கட்டமைப்பு, டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்து மாலைதீவுடன் கைகோருங்கள் என மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்தார். மாலைதீவு – இலங்கை வர்த்தக மன்றம், மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் செவ்வாய்க்கிழமை (05) மாலை கொழும்பில் நடைபெற்றது. மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் வர்த்தக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பில் மாலைதீவு மற்றும் இலங்கையின் முன்னணி […]

கறுமலையூற்று கடற்கரைப் பகுதி விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடை மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல்!

திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரைப் பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடையானது மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கும் செயலாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை (05) ஜனாதிபதி அதிமேதகு அனுரகுமார திஸாநாயக அவர்களுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கறுமலையூற்று கடற்கரைக்கு, செவ்வாய்க்கிழமை […]

ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்

இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ‘IN-SLN DIVEX 2026’ கூட்டுச் சுழியோடி (Diving) பயிற்சி கடந்த ஏப்ரல் 28 அன்று கொழும்பு கடற்பரப்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான நவீன நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’, கடந்த ஏப்ரல் 21, 2026 அன்று இலங்கை வந்தடைந்தது. இக்கப்பலில் வந்த இந்தியக் கடற்படை வீரர்களும், இலங்கை கடற்படையின் சுழியோடிகளும் இணைந்து ஏப்ரல் 21 முதல் 28 வரை தீவிரப் […]

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை!

ஹோர்முஸ் நீரிணையில் நேற்று ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்தும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். நேற்றைய பகைமை நடவடிக்கைகளுக்குப் பிறகு போர்நிறுத்தம் முடிவடைந்துவிட்டதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இல்லை, போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை” என்று குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் ‘Project Freedom’ மெகாத் திட்டம் ஆகிய […]

தவறான’ கருத்துக்களை வெளியிட்டமைக்காக கம்மன்பிலவிடம் காவல்துறை விசாரணை

திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் தவறானவை என்றும், அவை உத்தியோகபூர்வ கண்டறிதல்களுக்கு முரணாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள காவல்துறை, அவரது கருத்துக்களை நிராகரித்துள்ளது. ஊடக சந்திப்பு ஒன்றின் போது கருத்து தெரிவித்த காவல்துறை, உயிரிழந்தவரின் மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது மனைவி அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கம்மன்பில கூறியிருப்பது உண்மையல்ல என்று தெரிவித்தது. இந்த மரணம் தற்கொலையா அல்லது தற்கொலை போல சோடிக்கப்பட்டதா என்பது குறித்து […]

அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளது?

அரசாங்கம் அதிக விலைக்கு உரத்தை கொள்வனவு செய்துள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தேசிய உரச் செயலகம் விளக்கமளித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த அலுவலகம், குறித்த கூற்றில் உள்ள சில விடயங்கள் உண்மையானவை அல்ல என வலியுறுத்தியுள்ளது. கஜகஸ்தானில் இருந்து குறைந்த விலைக்கு உரத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தும், 800 அமெரிக்க டொலர் விலையில் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருந்தார். அந்நாட்டிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் யூரியா […]

தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவா? – சென்னையில் இன்று அவசர ஆலோசனை; ‘மேஜிக் எண்’ணை நெருங்குகிறார் விஜய்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK), ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை அடைய 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் மேலிடத்திடம் ஏற்கனவே ஆதரவு […]