நீதித்துறையின் சுதந்திரத்தில் நிறைவேற்று அதிகாரம் அத்துமீறித் தலையிடுவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இந்தப் பிரேரணை இன்று (06) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க, பிரதி கோலாசான்களான ஜே.சி. அலவத்துவல மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோருடன் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இதனைச் சமர்ப்பித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.