“பெரும்பான்மை இல்லாமல் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்யக்கூடாது!” – ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பறக்கவிட்ட அவசரக் கடிதம்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை (மே 7) முதலமைச்சராகப் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை பலமான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு விஜய்யிடம் இல்லை […]

“ஒரு ரூபாய்கூட கொடுக்காமல் சரித்திர வெற்றி!” – விஜய்யைப் பாராட்டித் தள்ளிய செங்கோட்டையன்!

கோவை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஈட்டியுள்ள பிரம்மாண்ட வெற்றி குறித்து, அதிமுக-வின் மூத்த தலைவரும் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான செங்கோட்டையன் வியப்புத் தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் இந்த வெற்றி ஒரு “சரித்திர நிகழ்வு” எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார். செங்கோட்டையன் பேசுகையில், “வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்காமல், முதல் தேர்தலிலேயே தவெக சரித்திர வெற்றி பெற்றுள்ளது. விஜய்யை மக்கள் நேசிக்கிறார்கள்; அவர் நேசிக்கின்ற […]

“தவெக-வுக்கு ஆதரவு கிடையாது!” – எடப்பாடியுடன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு; கே.பி. முனுசாமி அதிரடி அறிவிப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். தவெக-விற்குப் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிமுக-வின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெக-விற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக-விற்குள் இருவேறு கருத்துகள் நிலவிய நிலையில், இன்று காலை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர் இல்லத்தில் எஸ்.பி. வேலுமணி, கே.சி. […]

“கூட்டணிகள் பிரிவதும் சேர்வதும் இயல்பே!” – திமுக-விலிருந்து விலகியது குறித்து ஜோதிமணி எம்.பி. விளக்கம்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி இது குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் நலன் மற்றும் எதிர்காலம் கருதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக தவெக-வுடன் பயணிக்க முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது பதிவில், “அரசியலில் கூட்டணிகள் சேர்வதும், பிரிவதும் இயல்பானது தான். 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக-வும் காங்கிரஸை […]

“இக்கட்டான நேரத்திலும் உங்களுடன் இருப்பேன்” – ஸ்டாலினை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் உருக்கமான ஆதரவு!

சென்னை: தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில், திரையுலக நண்பர் என்ற முறையிலும், தார்மீக ரீதியாகவும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டைக்கு வருகை தந்தார். சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்யின் தவெக 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் […]

தவெக-வுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு! – அமைச்சரவையில் யாருக்கு இடம்? பனையூரில் அதிரடி ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறிக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வமான முழு ஆதரவை வழங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய்யை இன்று நேரில் சந்தித்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், அக்கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினர். இதன் மூலம் 107 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டுள்ள விஜய்யின் பலம் 112-ஆக உயர்ந்துள்ளது (விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ள நிலையில்). இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்க விஜய் சம்மதம் […]

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்குத் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி: மயிலாப்பூர் இல்லத்தில் குவிந்த முன்னணி நட்சத்திரங்கள்!

சென்னை: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மறைந்த முன்னணித் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் உடல், இன்று (மே 6) விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.பி. சவுத்ரியின் மறைவுச் செய்தி கேட்டது முதல் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், அவரது உடலுக்கு நடிகர்கள் சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால், சித்தார்த், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான முன்னணி […]

“விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” – தவெக தலைவர் விஜய்க்கு இயக்குனர் சேரன் உருக்கமான வாழ்த்து!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னதாக விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த சேரன், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். தனது பதிவில், “சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வென்றிருக்கும் விஜய் அவர்களை மனமுவந்து வாழ்த்துகிறேன். எந்தக் கட்சிகளின் பிடியில் […]

போலி வைத்தியர் ஒருவர் கைது

பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர், பொலன்னறுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பிராந்திய குற்ற புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் பொலன்னறுவை, ‘தீப உயன’ (Deepa Uyana) பகுதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிராந்திய குற்ற புலனாய்வு பிரிவின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் இதற்கு முன்னர் பொரளை, கண்டி, மினுவாங்கொடை […]

வவுனியாவில் இளம் பெண்ணைக் காணவில்லை

வவுனியாவைச் சேர்ந்த எம். டென்சிகா என்ற 19 வயது இளம் பெண் (05.05.2026) நேற்று இரவு முதல் காணாமற் போயுள்ளார். அவரை கடைசியாக இன்று காலை (06/05/2026) வவுனியா சிறைச்சாலை முன்பாக பச்சை நிற மலர் வடிவ உடை அணிந்தபடி ஒருவர் பார்த்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவரை எங்காவது பார்த்தால் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தால் தயவு செய்து உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் என குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றார்கள். 076 3231693, 076 7571208