விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து!

சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி கம்பன் கலை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘கல்விக்கு எதிரான சனாதன கொள்கை’ குறித்துத் திருமாவளவன் ஆற்றிய உரை, வெறுப்புப் பேச்சாக இருப்பதாக இந்து முன்னணி பொதுச் செயலாளர் டி.என்.கண்ணன் அளித்த புகாரின் பேரில் புதுச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். புதுச்சேரி நீதிமன்றத்தில் […]

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே, 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சைபர் திருட்டு குறித்து இலங்கை அதிகாரிகள் அறிந்து கொண்டதாக, இந்த விவகாரத்தை நன்கு அறிந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது நாட்டின் நிதி மேற்பார்வையில் உள்ள பாரிய முறையற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) உறுப்பினரும், புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) நாடாளுமன்ற உறுப்பினருமான […]

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள் வாக்களித்த ‘முறைமை மாற்றத்திற்கு’ (System Change) விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என்று அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். “இந்த தன்னிச்சையான நடவடிக்கை, நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் மிகவும் முக்கியமான நாடாளுமன்றத்தின் ‘தணிக்கை மற்றும் சமநிலை’ (Checks and balances) முறைமை மீதான மரியாதையின்மையை காட்டுகிறது. [இதன் […]

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தி (NPP) நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றுகையில், விசாரணைகளின் பின்னர் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ள நாடுகள், நபர்கள் மற்றும் அதன் அளவு குறித்த அனைத்து விபரங்களையும் வெளிப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத […]

திருமதி யோகாதேவி சிவயோகேஸ்வரன் (யோகா)

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Pinner Road, West Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகாதேவி சிவயோகேஸ்வரன் அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோகம்மா பொன்னையா தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற சிவயோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், பாலயோகம்(பத்மா), தவயோகராஜா, மற்றும் ஜெயசுந்திரா(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற மோகன் மற்றும் யோகன், அருந்ததி ஆகியோரின் சிறிய தாயாரும், தர்மேந்திரா, கோபாலகிருஷ்ணன், பேரின்பநாதன், […]

.முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணம்: இலண்டன் தூதரகம் மற்றும் பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள்

பொதுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட உயர்மட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, கடந்த புதன்கிழமை (29) நீதிமன்றத்தில் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரணிலின் “தனியார்” வெளிநாட்டுப் பயணத்தின் போது, இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஒரு தனியார் பயண நிறுவனம் இணைந்து, செலவுகளைக் கடுமையாக உயர்த்தி மோசடி செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பிணையில் உள்ள ரணில் விக்ரமசிங்க, உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், செலவிடப்பட்டதாகக் […]

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொது நிதிகள் பற்றிய குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு இருப்பதாக சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2022 இல் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 121-இன் கீழ் பொது நிதிகள் பற்றிய குழு நிறுவப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டத்தின் கீழ், நிலையியற் கட்டளைகளை மீறுபவர்களுக்கு […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தகங்களை எழுதி குற்றங்களை மறைத்துக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். மட்டக்களப்பில் பெருத்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி, வேலூரில் […]

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும்” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அரசியல் தீர்வு குறித்த ஆவணத்தைத் தயாரிப்பதற்காக 28 பேர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வெளியிட்ட விசனம் குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது […]

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(29) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒழுங்கமைப்பில், அபிவிருத்தி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து […]