நகர சபையில் பதற்றம்; வாயில் பிளாஸ்ரருடன் அமைதிப் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா நகர சபையில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற மாதாந்த அமர்வு, கடுமையான பதற்ற நிலையை எட்டியது. கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் சபை அறிக்கை (Minutes) தொடர்பான சர்ச்சை காரணமாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான அமர்வே மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. கூட்டம் தொடங்கியவுடன், ஆளும்கட்சி உறுப்பினர் வைத்தியர் தர்மபிரிய சபை அறிக்கை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காது, சபையின் அனுமதியைபெற்று வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் நகர சபைத்தலைவரும் உறுப்பினருமான […]

மே தினப் பேரணியில் இணையுமாறு சஜித் அழைப்பு

 தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் சுபீட்சத்தை முன்னெடுப்பதற்கும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் அதேவேளையில், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதன்மையான அடியை ஐக்கிய மக்கள் சக்திஎடுத்துவைக்க விரும்புவதாகப் பிரேமதாச தெரிவித்தார். […]

செம்மணி மனிதப் புதைகுழியின் 3ம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்காக 08 வாரகால பகுதி தேவை […]

நாளை தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய வேண்டாம்!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைத்துக் கலந்துரையாடிய பின்னர், காணி உரிமையாளர்களது விருப்பத்தின் அடிப்படையில், வெளிப்படையான எழுத்து மூலமான இணக்கப்பாடு எட்டப்பட்டு காணி விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அளவீடு […]

யாழ் அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையே தீவிபத்து

யாழ் அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையேவிசமிகள் மூட்டிய தீயால் தரிசுக் காணிகளில் இருந்த புற்றரைகள் பல ஏக்கர் அளவில் எரிந்து நாசமாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக புகை மூட்டம் அதிகரித்து, பொதுமக்கள் சாலையில் செல்வதற்கே சிரமமான நிலை உருவானது. யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியிலும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தினர். வெப்பமான காலநிலையால் ஏற்கனவே வறண்டு வரும் பற்றரைகள் இவ்வாறு அழிவது கால்நடைகளின் […]

யாழில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பசுமை அமைதி விருதுகள்-2025 பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) பிற்பகல்- 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் வாத்திய இசைக்கச்சேரி இடம்பெற்றது.   இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் […]

“தரம் குறைந்த ஐஸ்கிரீம்களுக்குத் தடை!” – தமிழகம் முழுவதும் அதிரடி ஆய்வுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு!

தமிழகத்தில் கோடை வெயில் சதத்தைத் தாண்டிப் பதிவாகி வரும் நிலையில், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்காகத் தரம் குறைந்த அல்லது கலப்படப் பொருட்களைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆய்வின் முக்கிய நோக்கங்கள்: கலப்படத் தடுப்பு: ஐஸ்கிரீம் தயாரிப்பில் அனுமதிக்கப்படாத ரசாயனங்கள், செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதிகப்படியான சர்க்கரைப் பதிலீடுகள் (Sweeteners) பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படும். வழிகாட்டுதல்கள் அமல்: உற்பத்தி […]

“சென்னையைத் தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை” – போலி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அகரம் பவுண்டேஷன் வேண்டுகோள்!

சென்னை, நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்டு, ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காகப் பணியாற்றி வரும் ‘அகரம் பவுண்டேஷன்’ அமைப்பின் பெயரைப் பயன்படுத்திச் சில தனிநபர்கள் மோசடியில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து அகரம் பவுண்டேஷன் நிர்வாகம் இன்று ஒரு முக்கிய விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அகரம் பவுண்டேஷன் அறிக்கையின் சிறப்பம்சங்கள்: ஒரே அலுவலகம்: அகரம் பவுண்டேஷன் சென்னை தியாகராய நகரில் மட்டுமே தனது அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் கிளை அலுவலகங்கள் கிடையாது. […]

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு: “தற்குறிகளின் வேலையா?” என பேஸ்புக்கில் கடும் ஆவேசம்!

சென்னை, சென்னையில் இசையமைப்பாளரும், பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் ரீதியான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சம்பவம் நடந்தது என்ன? உணவகத்தில் தாக்குதல்: இன்று மதியம் சென்னை கொட்டவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் சாப்பிடச் சென்றுள்ளார். காரை வெளியே நிறுத்திவிட்டு அவர் உள்ளே சென்றிருந்த நேரத்தில், யாரோ […]

மாலி பாதுகாப்புத்துறை அமைச்சர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஜிஹாதி அமைப்புகள் மற்றும் பிரிவினைவாதிகள் ஒருங்கிணைந்து நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதல்களில், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் பமாக்கோவிற்கு அருகிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லொறி ஒன்றின் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது அமைச்சர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டதாகவும், இதன்போது ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரச ஊடகம் […]