யாழில் மிகவும் சிறப்பாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பசுமை அமைதி விருதுகள்-2025 பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) பிற்பகல்- 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் வாத்திய இசைக்கச்சேரி இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். திருநாவுக்கரசு வேல்நம்பி பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் மு.அ.முகமது சுல்பீக்கர் அபூபக்கர், இயற்கைவழிச் செயற்பாட்டாளர் சி.சுந்தரேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆண்டுதோறும் மாணவர்களிடையே தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் சூழல் பொது அறிவுப் பரீட்சை நடாத்தி பசுமை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இலங்கையின் பல மாவட்டங்களில் இருந்தும் 250 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதி சான்றிதழோடு சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

சூழல் பொது அறிவுப் பரீட்சையில் முதலிடத்தை பிடித்து சூழலியல் ஆசான் க.சி குகதாசன் ஞாபகார்த்த பசுமை அமைதி விருதுகளாக முதலாம் இடத்தைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்‌ஷிகா மதிவதனன் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த டிலுக்‌ஷினி டன்ஸ்ரன் வெள்ளிப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றம்யா றமேஸ் மட்டக்களப்பு சென்.ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த அன்ரனி கிங்சிலி யனுசன் மன்னார் டிலாசால் கல்லூரியைச் சேர்ந்த கிறிஸ்துராசா அன்ரனி டிலைக்சன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட மாணாக்கர் உழவர் வீட்டுத் தோட்டப் போட்டியில் சிறப்பாக பங்கேற்ற மாணவர்களும், தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டின் சிறந்த சூழல் நேயச் செயற்பாட்டாளர் விருதான தாலகாவலர் க.கனகராசா ஞாபகார்த்த விருதினை பல்லுயிர் நிறுவனரான சிவகுமாரன் நிரோசன் பெற்றுக் கொண்டார். சிறுதானிய பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு தேனீ வளர்ப்பு குறுங்காடுகள் உருவாக்கம் உட்படப் பல்வேறு சூழல்நேயப் பணிகளை ஆற்றிவரும் இவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பாடசாலையொன்றைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பசுமை அமைதி விருதுகளைப் பெற்றுக் கொண்டதோடு அதன் அதிபருக்கும் ஊக்குவிப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வரவேற்புரையைப் பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைப் பொதுச்செயலாளர் கை. சரவணனும், நன்றியுரையைப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ம. கஜேந்திரனும் ஆற்றியிருந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருந்தார். அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக விழா நடந்தேறியது.

8

“மின்சாரப் பிரச்சனைக்கும், விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசை கைக்காட்டுவதா?” – தவெக அரசுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

October 14, 2026

மதுரை: தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்சாரப் பிரச்சினை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்திய அரசைக் குற்றம்

7

“எங்க உங்க அப்பாவையே காணோம் – அரசு பேருந்து பெயர் பலகையில் சர்ச்சை வாசகம்!”

October 14, 2026

கடலூர்: புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகையில், ஆளுங்கட்சியான திமுகவினரைக்

6

“கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் விரைவில் நனவாகும்!” – முதலமைச்சர் விஜய்யிடம் சந்திரபாபு நாயுடு உறுதி!

October 14, 2026

விஜயவாடா: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு அரசு முறைப் பயணமாக இன்று சென்றுள்ளார். அங்கு அவர் ஆந்திர

5

“இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆலோசிக்க வேண்டும்!” – சி.வி.சண்முகம்!

October 14, 2026

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட

4

“மற்ற கட்சிக்காரர்களை அழைத்து கட்சியில் இணைப்பது கேவலம்!” – தவெக மீது இபிஎஸ் தாக்கு!

October 14, 2026

சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தில் போதிய நிர்வாகிகள் இல்லாத காரணத்தால், மற்ற கட்சிக்காரர்களைக் கூவிக்கூவி அழைத்துக் கட்சியில் இணைப்பது மிகவும்

3

“ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க.ஸ்டாலின்!” – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

October 14, 2026

சென்னை: எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,

2

“எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்?” – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

October 14, 2026

சென்னை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி திடீரெனக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, முன்னாள் முதலமைச்சரும்

1

“சென்னையில் ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம்!” – முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்!

October 14, 2026

சென்னை: சென்னை மாநகர மக்களுக்குக் கோடைக்காலத்திலும் எந்தவிதத் தடையுமின்றிச் சீரான குடிநீர் வழங்கும் வகையில், சுமார் 3,108 கோடி ரூபாய்

Gnanasara-Thera

சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கவேண்டும் – ஜனாதிபதி நியமித்த குழு பரிந்துரை

October 14, 2026

சிறைச்சாலையிலிருந்து வெளியே செல்லும்போது பௌத்தமதகுருமார் காவியுடையை அணிவதற்கு அனுமதிக்கும் புதிய சிறைச்சாலை விதிமுறையை நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார முன்மொழிந்துள்ளார். ஞானசார

hiv

இலங்கையில் ஆண்களுக்கு எச்.ஐ.வித் தொற்று அதிகரிப்பு

October 14, 2026

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

china

கொழும்பு போர்ட் சிட்டியில் சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

October 14, 2026

கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம்

Saji

அனோஜனின் மரண தண்டனை இரத்துக்கு நன்றி தெரிவித்தார் சஜித்

October 14, 2026

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு