தீயிட்டு அழிப்பதற்கு 302 கிலோ போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டது!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட சுமார் 302 கிலோகிராம் போதைப்பொருட்கள் இன்று திங்கட்கிழமை (27) அழித்தொழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பலப்பிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த இந்தப் போதைப்பொருட்களை அழிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட 22 கிலோ 888 கிராம் ஹெரோயின் , 33 கிலோ […]

உக்ரைனுக்கு 90 பில்லியன் யூரோ நிதி உதவி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

ரஷியாவுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடும் போர் புரிந்து வரும் உக்ரைன் நாடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நிதிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. போருக்காகத் தன் கஜானாவைக் காலி செய்துள்ள உக்ரைனுக்கு புதிய உயிர் கொடுக் கும் வகையில் சுமார் 90 பில்லியன் யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியுதவிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், சமீபத்திய தேர்தலில் தோல்வியைத் தழுவினார். […]

யாழில் உள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் 15ஆவது ஆண்டு நிறைவினை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கொண்டாடியது. கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வட இலங்கையிலுள்ள சமூகங்களை அமெரிக்காவுடன் இணைப்பதில் நீண்டகாலமாக அது வகிக்கும் பங்கினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது. அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் Freedom 250 முன்முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய “Freedom 250 […]

“புதிய அரசு அமையும் வரை காவிரி ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியாகாத சூழலில், நாளை மறுநாள் (ஏப்ரல் 29) டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-வது கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்ரல் 27) தனது அதிகாரப்பூர்வ் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து: காவிரி மேலாண்மை […]

திரு கந்தையா சுந்தரமூர்த்தி

யாழ். வட்டுகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Sabah, Brunei Kuala Belait, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சுந்தரமூர்த்தி அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்துரை காமாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமனும், சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், பத்மநாதன், யோகராணி, காலஞ்சென்ற திலகவதி மற்றும் சறோஜினி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். […]

ஊர்வணிகன்பற்று நில அபகரிப்புத் தொடர்பில் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள ஊர்வணிகன்பற்று கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை இராணுவத் தேவைக்காக நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஊர்வணிகன்பற்று கிராமமானது மிக நீண்ட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுடன், பல தலைமுறைகளாக தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழ்விடமாகப் பேணி வந்த நிலமாகும். […]

$ 2.5 மில்லியன்திறைசேரி  திருட்டு: ஏழு அதிகாரிகளிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

:நிதியமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (Department of External Resources) கணினி அமைப்பிலிருந்து $ 2.5 மில்லியன் திருடப்பட்டது தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, ஏழு அதிகாரிகளிடம் CID உத்தியோகபூர்வ வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. இந்த நபர்கள் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் பொதுக் கருவூலத்தின் அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் (State Debt Management Office) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை […]

தொழில்நுட்ப விசாரணை குழு ஆவணங்களை மாற்றியுள்ளது: சுயாதீன சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு

$ 2.5 மில்லியன் சைபர் திருட்டு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப விசாரணை குழு, உண்மையை மறைக்கும் நோக்கில் தொடர்புடைய ஆவணங்களை மாற்றியுள்ளதாக சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம் (Free Lawyers Association) நேற்று தெரிவித்துள்ளது. இந்த விசாரணை குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த சிவில் ஆர்வலர் கீர்த்தி தென்னக்கோன் பின்வருமாறு தெரிவித்தார்: “கருவூலத்தின் பிரதிச் செயலாளர் ஏ.என். ஹப்புகல தலைமையில் மேலும் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ‘தொழில்நுட்ப விசாரணை குழு’ மார்ச் 24, 2026 அன்று உள்வாரி […]

$ 2.5 மில்லியன் சைபர் திருட்டு: ஜனாதிபதி தனது கடமையில் தவறிவிட்டார் என கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய முகமை ஒன்றிடம் பெறப்பட்ட கடனுக்கான நிதியை அனுப்பியதில் 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிப் பொறுப்புச் சட்டம் (Fiscal Responsibility Act) மீறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள கூட்டு எதிர்க்கட்சி, $ 2.5 மில்லியன் திருடப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி  அநுர குமார திஸாநாயக்க தனது கடமையில் தவறிவிட்டார் என்று  தெரிவித்தது. “நிதியமைச்சர் என்ற முறையில், $ 2.5 மில்லியன் திருடப்பட்டது குறித்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டிய கடமையில்  அநுர குமார திஸாநாயக்க தவறிவிட்டார்,” என்று முன்னாள் […]

டீசல் ஊழல் தொடர்பாக இன்று லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு

டீசல் ஊழல் என்று கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சில எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இந்த முறைப்பாட்டைச் செய்த பின்னர், டீசல் ஊழல் குறித்து அந்தந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய குடியரசு முன்னணி (United Republic Front) மற்றும் […]