யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் 15ஆவது ஆண்டு நிறைவினை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கொண்டாடியது.
கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வட இலங்கையிலுள்ள சமூகங்களை அமெரிக்காவுடன் இணைப்பதில் நீண்டகாலமாக அது வகிக்கும் பங்கினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.
அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் Freedom 250 முன்முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய “Freedom 250 Pavilion” கூடத்தினையும் இதன்போது தூதரகம் திறந்து வைத்தது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடமானது, உள்ளூர் சமூகங்களுடனான நேரடி ஊடாட்டத்திற்கான ஒரு தளமாக Jaffna Social Action Center உடனான பங்காண்மையுடன் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.