வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தில் டிரம்ப்பை இலக்குவைத்த நபர் யார்?

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் குறித்த தகவல்களை வாஷிங்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் குறித்த விபரங்கள்: வாஷிங்டன் மெற்றோபொலிட்டன் பொலிஸ் திணைக்களத்தின் இடைக்கால பொலிஸ் மா அதிபர் ஜெப்ரி கரோல் (Jeffrey Carroll) தெரிவிக்கையில், “சந்தேக நபர் இந்தச் சம்பவத்திற்கு முன்னரே அதே ஹோட்டலில் (Washington Hilton) தங்கியிருந்த ஒரு விருந்தினர் (Guest) என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்றார். தற்போது அந்த நபர் தங்கியிருந்த அறையை பொலிஸார் […]
வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என […]
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுத்துவைப்பு: இன்று எதிர்ப்புப்போராட்டம்!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் புத்தகங்கள் சுங்கத்திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இன்றைய தினம் காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாகக்கூறித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்கள், பாதுகாப்பு மற்றும் கலாசார அமைச்சின் அனுமதியுடன் விடுவிக்கப்படும் என கடந்த 17 ஆம் திகதி கலாசார அமைச்சில் […]
தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன

அடுத்த நான்கு ஆண்டுகாலத்திற்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (25) நடைபெற்ற அக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார். இம்முறை தலைவர் பதவிக்காக 5 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் இலங்கை கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உப தலைவர் சிரந்த பீரிஸ் மற்றும் இலங்கை பேஸ்பால் கூட்டமைப்பின் தலைவர் அஸங்க செனவிரத்ன ஆகியோர் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கியிருந்தனர். இதன்போது […]
நியூசிலாந்து ரக்பி அணியிடம் போராடித் தோற்றது இலங்கை டஸ்கர்ஸ்!

கொழும்பு ரேஸ்கோர்ஸ் சர்வதேச ரக்பி மைதானத்தில் நேற்று(25) மாலை நடைபெற்ற நியூசிலாந்து 85 கிலோவிற்கும் குறைந்த எடையுடைய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை டஸ்கர்ஸ் அணி 27-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியடைந்தது. பலமிக்க நியூசிலாந்து அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இரண்டு ட்ரை (Try)களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக ஆகாஷ் மதுஷங்க மற்றும் ஜனிந்து டில்ஷான் ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் […]
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவரின் சகோதரர் ராஜு 15 கொலைகளை ஒப்புக்கொண்டார்

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரரான ‘SF ராஜு’ என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்றுக்(25) காலை மீட்கப்பட்டுள்ளன. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர், 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார். இன்று காலை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தோட்டத்தில் […]
ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றப்படும் புகைப்படம்

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்புப் பிரிவினரால் மேடையிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் பரபரப்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேரில் கண்ட சாட்சியம்: செய்தியாளர் போ எரிக்சன் (Bo Erickson) இந்த இக்கட்டான தருணத்தைப் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளார். அதில், துப்பாக்கிச் சத்தம் கேட்ட அடுத்த சில விநாடிகளில், இரகசியப் பொலிஸ் (Secret Service) அதிகாரிகள் அதிபரைச் சூழ்ந்துகொண்டு, அவரை மேடையிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு […]
பொதுத் தொடர்பு தொடர்பான உலக மாநாட்டில் கலந்து கொள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரான்ஸ் பயணம்

சர்வதேச பொலிஸ் அமைப்பு (INTERPOL) நடத்தும் முதலாவது பொதுத் தொடர்பு தொடர்பான உலக மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு பெற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், சட்டமாணி ஃபிரெட்ரிக் வுட்லர், பங்கேற்க நேற்றுக் காலை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். அங்கு அவர், சமீப காலத்தில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி நிலைமைகளின் போது இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விசேட உரை ஒன்றை வழங்க உள்ளார். இவ்வாறு […]
உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி; உலக வானிலையியல் அமைப்பு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி கோலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ நிலைமை வளர்ச்சியடையக்கூடும் என உலக வானிலையியல் அமைப்பு தெரிவித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நிலைமை உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், கடல் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய பசுபிக் சமுத்திரத்தின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதையே எல் […]
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது; அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி பாதுகாப்பாக உள்ளனர்

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்வில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இரகசியப் பொலிஸ் (Secret Service) அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. பாதுகாப்புத் துறை அறிக்கை: இரகசியப் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி (Anthony Guglielmi) சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருந்து மண்டபத்தின் பிரதான பாதுகாப்பு சோதனைப் பகுதிக்கு (Security Screening Area) அருகில் “துப்பாக்கிச் சூடு சம்பவம்” ஒன்று நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். “அமெரிக்க ஜனாதிபதி, முதல் பெண்மணி மற்றும் […]