22 தேரர்கள்; 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய, நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்களுக்கு இடையில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]

வெள்ளை மாளிகை நிகழ்விலிருந்து டிரம்பை பாதுகாப்பாக அழைத்து சென்ற விசேட படைப்பிரிவினர்

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கஜனாதிபதியையும் முதல் பெண்மணியையும்அந்த இடத்திலிருந்து விசேட படைப்பிரிவினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கை: அமெரிக்கஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி மேடையிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க இரகசியப் பொலிஸின் மின்னல் வேகத் தாக்குதல் குழுவினர் (Counter Assault Team – CAT) அந்த இடத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் , அமெரிக்கஜனாதிபதி வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களில்,  மற்றொரு முக்கிய பிரமுகரை (Protectee) பாதுகாப்புக் […]

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றம்

வாஷிங்டன் ஹில்டன் (Washington Hilton) ஹோட்டலில் இன்று இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் (WHCA) வருடாந்த இரவு விருந்து நிகழ்ச்சியில், திடீரென ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்விடத்தில் நடந்தவை: நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மண்டபத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தம் கேட்டது. இதனைத் தொடர்ந்து, மண்டபத்திலிருந்த நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சமடைந்து உணவருந்தும் மேசைகளுக்கு அடியில் தஞ்சம் புகுந்தனர். ட்ரம்ப் மற்றும் உயர் […]

டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றப்பட்டார்

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பலத்த சத்தம் கேட்டதை அடுத்து, வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றப்பட்டார்

2.5 மில்லியன் டொலர்கள் திறைசேரி நிதி மாயம்: நிதி அமைச்சின் 4 சிரேஷ்ட அதிகாரிகள் இடைநீக்கம்

விசாரணை முடியும் வரை பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் இருவர் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் இருவர் நீக்கம். CID, மத்திய வங்கியின் FIU மற்றும் SLCERT இணைந்து சர்வதேச ரீதியிலான விசாரணைகளை முன்னெடுக்கின்றன. ——————————————- சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திசைதிருப்பப்பட்ட சைபர் மோசடி தொடர்பாக, ஒழுக்காற்று விசாரணை முடியும் வரை நிதி அமைச்சின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகளை அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. இதில் பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தைச் (PDMO) சேர்ந்த இரு […]

ரணிலின் மனைவியிடம் 4 மணிநேர விசாரணை: எட்டுப் பக்க வாக்குமூலத்தைப் பெற்றது CID

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் முதல் பெண்மணி மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தி எட்டுப் பக்க வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) மைத்திரி விக்ரமசிங்கவிற்கு கௌரவப் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், இன்ஸ்பெக்டர் நலிந்த ஹேரத் தலைமையிலான ஒரு பெண் […]

திறைசேரி இணையக் கொள்ளை : பிரான்ஸ் கடன் ஆவணங்கள் மாயம்

பிரான்ஸிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளன. திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய அதே ஹேக்கர் குழுவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய பிரான்ஸ் கடன் திருப்பிச் செலுத்தல் தொடர்பான ஆவணங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளன என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹேக்கர்கள் இந்த ஆவணங்களை அணுகி, மற்றொரு மோசடியைச் செய்யும் நோக்கில் அவற்றை அகற்றியிருக்கலாம் […]