மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றமைக்கான காரணம் வௌியானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றமை, அவர் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையினாலேயே எனத் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய அறுவைச் சிகிச்சை முடிந்து தேறிவரும் நிலையில், அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வீட்டிற்குச் சென்றமை குறித்து கவலையடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன கடந்த 24ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியின் […]

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னல் […]

புத்த பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாக பயன்படுத்தியமைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

புத்த பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக மூன்று நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூட்டாக இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய “குஷ்” மற்றும் “ஹேஷ்” ரக போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். பொலிஸ் போதைப்பொருள் […]

பிரதேச சபை உறுப்பினர்களாகவுள்ள தம்பதியினர் மீது தாக்குதல்

இப்பலோகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கயான் அதிகாரிய உள்ளிட்ட குழுவினர் நடத்திய தாக்குதலில் தம்பதியினர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பலோகம, அலுத்புலியங்குளம், விஜிதபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளனர். ஹிரிபிட்டியாகம விளையாட்டு மைதானத்தில் நேற்று (25) நடைபெற்ற இப்பலோகம பிரதேச சபை புத்தாண்டு விழாவின் போது, குறித்த உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளான […]

பாராளுமன்ற நிதி பற்றிய குழு செவ்வாய்க்கிழமை கூடுகின்றது!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற நிதி பற்றிய குழு கூடவுள்ளதாகவும், அங்கு ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து கட்சி பேதமின்றி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அங்கு எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சின் கணினி கட்டமைப்பு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை எவ்வகையிலும் நம்ப முடியாது எனவும், அவ்வாறு நடந்திருந்தால் அது பாரியதொரு பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். […]

ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணியிடை நீக்கம்?

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த போது கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த புகையிரதத்தின் சாரதி, காப்பாளர், உதவிச் சாரதி மற்றும் உதவிப் புகையிரத காப்பாளர் ஆகியோருக்கே இந்த தடையை விதிக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

களப்புப் பகுதியில் பாரிய சுற்றிவளைப்பு!

வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாரியளவிலான பீடி இலைத் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (25) அதிகாலை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவல பாலத்திற்கு அருகிலுள்ள களப்புப் பகுதியில், நீர்க்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இரண்டு படகுகளைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 596 கிலோகிராம் 750 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு படகுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீர்க்கொழும்பு பொலிஸ் […]

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து; இளைஞன் பலி!

கலென்பிந்துணுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உபுல்தெனிய, பஹலகம ஏரி அணையில் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று அணையில் இருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என கலென்பிந்துணுவெவ பொலிஸார் தெரிவித்தனர். விவசாய நடவடிக்கைகளுக்காக சில தினங்களுக்கு முன்னரே குறித்த இளைஞர் இப்பகுதிக்கு வருகை தந்துள்ளார். அவர் உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த ஒருவரது உழவு இயந்திரத்தில் […]

கோடை வெயில் அதிகரிப்பு: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள்!

சென்னை, தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பட்டாசு ஆலைகளில் ஏற்படக்கூடிய வெடி விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (PESO) பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள்: வேலை நேரக் கட்டுப்பாடு: மிகவும் அபாயகரமான ரசாயன மருந்து கலவை பணிகளைச் சூரிய வெப்பம் அதிகமாவதற்கு முன்பே முடிக்க வேண்டும். அதன்படி, காலை 6 மணிக்குத் தொடங்கி காலை 10 மணிக்குள் இந்தப் பணிகளை முடித்திட […]

“திமுகவினர் பூத் பிடிப்பு; கள்ள ஓட்டு!” – குறிஞ்சிப்பாடி, நெய்வேலி வன்முறைகள் குறித்து வேல்முருகன் அதிரடி புகார்!

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுகவினர் திட்டமிட்டு வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சித் (தவாக) தலைவர் வேல்முருகன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திட்டமிட்ட வன்முறை மற்றும் கள்ள ஓட்டு “நடந்து முடிந்த தேர்தலில் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் தவாக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. இதை உளவுத்துறை மூலம் அறிந்த திமுகவினர், […]