“மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் முழுநேர ஓய்வு கொடுப்பார்கள்” – லயோலா கல்லூரியில் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி!

சென்னை, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை லயோலா கல்லூரியில் உள்ள காப்பறையைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று நேரில் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசிய முக்கியத் தகவல்கள்: * ஸ்டாலினுக்கு ஓய்வு: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் ஏற்கனவே ஒரு முன்னாள் முதலமைச்சராகவே பார்க்கிறேன். இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் அவருக்கு முழுநேர ஓய்வைக் […]

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் குரல் மீண்டும் ஒலிக்கும்” – பழனியில் அமைச்சர் சேகர்பாபு உறுதி!

பழனி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழக மக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளனர். வரும் மே […]

2025 இல் மூன்றாவது உச்ச நிலையை அடைந்தது நாட்டின் இறக்குமதி செலவு

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி அளவில் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருந்தன. நீண்டகால கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய கேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தினால் வரி மற்றும் வரி அல்லாத பல கொள்கை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இருப்பினும், […]

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உலகளாவிய ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

ங்களகம, கொஹோம்பகஸ்தலாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மங்களகம பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் மங்களகம, கொஹோம்பகஸ்தலாவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் வந்த காட்டு யானையை விரட்ட முயன்ற போதே இந்த யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்களகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 11 பேர் காயம்

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (26) காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த பிரதேச வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சபாநாயகர் கண்டி […]

கல்வி நிறுவனங்களுக்கு புதிய சுற்றுநிருபம் வெளியீடு

அரசு வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “வெசாக் வாரத்தில்”, பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. மே 26 ஆம் திகதி முதல் ஜூன் 02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக அறிவித்து, அந்த காலப்பகுதியில் உரிய நிகழ்ச்சிகளை கல்வி நிறுவன வளாகங்களில் ஏற்பாடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இந்த […]

விசேட சுற்றிவளைப்பில் 660 பேர் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது 24 மணிநேரத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 28,078 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 234 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதுடன், 90 பேருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 109 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 77 பேரும் கைது […]

நாட்டை வந்தடையும் பாரிய கச்சா எண்ணெய் கப்பல்

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இன்று (26) பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் (CPSTL) தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலின் மூலம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்குக் கொண்டு வரப்படுவதாக அதன் மேலாண் பணிப்பாளர் கலாநிதி மயூரு நெத்திகுமார் தெரிவித்தார். இதன்படி, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு, இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக […]

“நீலகாமம் பிரகடனம்” அரசியல் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், மலையக மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் நேற்று வெளியிடப்பட்ட “நீலகாமம் பிரகடனம்” அரசியல் தலைவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. சமூக செயற்பாட்டுக்கான இளைஞர் குழு ஏற்பாட்டில் கஹவத்தை, நீலகாமம் முதலாம் இலக்கப் பிரிவுத் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற திறந்தவெளி மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், […]