பழனி,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழக மக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளனர். வரும் மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்ற குரல் மீண்டும் கம்பீரமாக ஒலிக்கும். ஸ்டாலின் இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்.
இந்தத் தேர்தலில் பதிவாகியுள்ள 85 சதவீத வாக்குப்பதிவு என்பது கடந்த 2021 தேர்தலோடு ஒப்பிடுகையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனவே, வாக்குப்பதிவு அதிகரிப்பு என்பது திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக, மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தரும்.”
தேர்தல் பரபரப்புகளுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது கொடைக்கானலில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அமைச்சர் சேகர்பாபு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
#SekarBabu #DMK #MKStalin #PalaniMuruganTemple #TNElection2026 #May4 #ElectionResults #TamilPolitics #DravidianModel #OathTaking #GovernorHouse #BreakingNews #TamilNaduElection #VictoryHope #DindigulNews #StalinAgain #PoliticsUpdate #TNAssemblyPolls #SpiritualVisit #ElectionAnalysis