மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றமைக்கான காரணம் வௌியானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்றமை, அவர் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையினாலேயே எனத் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதய அறுவைச் சிகிச்சை முடிந்து தேறிவரும் நிலையில், அவரது மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வீட்டிற்குச் சென்றமை குறித்து கவலையடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன கடந்த 24ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் அறுவைச் சிகிச்சையின் பின்னர் அவரது ஆரோக்கியத்தை மைத்ரி விக்ரமசிங்கவே கவனித்து வருவதாகவும், அவரும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அரசியல் நடவடிக்கைகளுக்காகக் கூட எவரும் அனுமதிக்கப்படாத ஒரு நேரத்தில் வெளியார் வருகை தருவது முன்னாள் ஜனாதிபதியின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் என வஜிர அபேவர்தன அன்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தியமை தொடர்பில் கூறப்படும் விசாரணை ஒன்றிற்காக வாக்குமூலம் வழங்க, கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸில் முன்னிலையாகுமாறு மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு III இன் பொறுப்பதிகாரியினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்திற்குப் பதிலளித்த மைத்ரி விக்ரமசிங்க, தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த வாக்குமூலத்தை கொழும்பு 03, ஐந்தாவது ஒழுங்கையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து பதிவு செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல், ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும் மைத்ரி விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கைகளைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்து, வாக்குமூலத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தார்.

இதற்கமைய, குறித்த வாக்குமூலத்தைப் பதிவு செய்ய கடந்த 24ஆம் திகதி வருகை தரவுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு III இன் பொறுப்பதிகாரி 20ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் மைத்ரி விக்ரமசிங்கவுக்கு அறிவித்திருந்தார்.

அதன்படி, குறித்த தினத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வீட்டிற்குச் சென்று அவரிடம் வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

arrest

இலஞ்சம் பெற்ற வருமான வரி அலுவலக ஊழியர் கைது

May 14, 2026

காணி ஒன்றின் மதிப்பீட்டு அறிக்கையை குறைந்த பெறுமதியில் தயாரித்துக் கொடுப்பதற்காக 35,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலன்னறுவை மாகாண வருமான

Raj

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் அம்பமாகும் ராஜபக்சர்களின் ஊழல் விவகாரங்கள்…

May 14, 2026

தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இலஞ்சம் ஒழிப்பு

Shani

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு

May 14, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை, பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தரம்

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம்

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்