ஒப்புரவான அபிவிருத்திக்கு ஏற்றவகையில் யாழ்ப்பாணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் – அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ யாழில் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கௌரவ போராசிரியர் (கலாநிதி) அனில் ஜெயந்த பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026). மாலை 06.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு வருகை தந்த வ அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்ற அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் தேவைப்பாடுகளை […]
ஹம்போல்ட் பிரான்கோஸ் (Humboldt Broncos) விபத்து: லொறி சாரதியின் நாடுகடத்தல் இடைநிறுத்தம்

2018 ஆம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற ஹம்போல்ட் பிரான்கோஸ் இளையோர் ஹொக்கி அணி வீரர்களின் பேருந்து விபத்துக்குக் காரணமான லொறி சாரதி ஜஸ்கிரத் சிங் சித்து (Jaskirat Singh Sidhu), நாடுகடத்தப்படுவதை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய நீதிமன்றம், அவரது நாடுகடத்தலைத் தற்காலிகமாக இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. : 2018 ஏப்ரல் 6 அன்று சஸ்காட்செவன் மாகாணத்தில் சித்து ஓட்டிச் சென்ற பாரவூர்தி (Semi-truck), நிறுத்தச் சமிஞ்சையை மீறிச் சென்றதால் ஹொக்கி அணியின் பேருந்துடன் மோதியது. […]
ஹமில்டன் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 16 வயது சிறுவன் பலி, ஆயுதம் ஏந்திய இருவருக்கு வலைவீச்சு

கனடாவின் ஹமில்டன் (Hamilton) நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் தொடர்பாக ஆயுதம் ஏந்திய இரு இளைஞர்களைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை 5:10 மணியளவில், ஹமில்டன் டவுன்டவுனில் உள்ள ஜாக்சன் ஸ்கொயர் (Jackson Square) வணிக வளாகத்தில் உள்ள ஒரு மொபைல் விற்பனை நிலையத்திற்குள் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. பாதிப்பு: துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் […]
ட்ரம்ப் வரிகளை நீக்கும் வரை அமெரிக்க மதுபானங்களுக்குத் தடை: மனிடோபா முதல்வர் அதிரடி

கனடாவின் மனிடோபா (Manitoba) மாகாண முதல்வர் வப் கினியூ (Wab Kinew), அமெரிக்க மதுபானங்கள் மீதான தடை குறித்து அதிரடியான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீதான வர்த்தக வரிகளை (Tariffs) நீக்கும் வரை அமெரிக்க மதுபானங்கள் மனிடோபா சந்தைக்கு வராது என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். வரிகள் நீக்கம்: கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அனைத்து வரிகளும் முழுமையாக நீக்கப்பட வேண்டும். எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files): ஒரு சுவாரசியமான […]
நாளை தமிழ் எழுத்தாளர்களின் புத்தக தடைக்கு எதிரான கண்டனப் போராட்டம்

இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் மீது அரசு மேற்கொண்டு வரும் தடை உத்தரவுகளுக்கு எதிராக, எதிர்ப்பைப் பதிவு செய்யவும், படைப்புச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் மாபெரும் கண்டனப் போராட்டங்கள் நாளை 26.04.2026 காலை முன்னெடுக்கப்படவுள்ளன. கிளிநொச்சி- கந்தசுவாமி ஆலய முன்றல் மற்றும் யாழ்ப்பாணம் – மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நாளை 26.04.2026 காலை 10 மணிக்கு இக் கண்டனப்போராட்டங்கள் நடைபெறவுள்ளன. அறிவின் மீதான இத்தடை, ஒரு சமூகத்தின் சிந்தனை மரபின் மீதான தாக்குதலாகும். இந்த […]
ரயில் விபத்து: விசாரணைக்காக விசேட குழு

சாகரிகா ரயில் தடம் புரண்டதில் கொங்ரீட் சிலிப்பர்களுக்கு (Concrete Sleepers) சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சிலிப்பர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததா? என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது எனவும் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், […]
திறைசேரி மோசடி குறித்து வெளியாகும் செய்திகளை நம்ப முடியவில்லை

திறைசேரியின் பணம் இனந்தெரியாத தரப்பினரின் கைக்குச் சென்ற சம்பவமானது ஹேக்கர்களின் (Hackers) செயல் என்று நம்ப முடியாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டுமாயின், திறைசேரி செயலாளரும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை பொருளாதாரத்தில் வலுசேர்க்கும் தேயிலைத் துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்கிறது

இலங்கை பொருளாதாரத்தில் வலுசேர்க்கும் பிரதான துறையான தேயிலைக் கைத்தொழில் தற்போது மிக மோசமான அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், இத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தேசிய தேயிலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சமன் கீகனகே தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது உபயோகிக்கும் யூ-709 என்ற ஒரு மூட்டை உரத்தின் விலை சந்தையில் 15,000 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளுக்கு முன்னர் 8,750 ரூபா முதல் 9,500 […]
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச்சுவார்த்தை

மிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துத் தயாரிக்கும் ஆவணமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலோங்கவேண்டும் என்பதையும், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்போது மேற்படி ஆவணத்தின் அடிப்படையிலேயே அப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்வதாக இந்த ஒற்றுமை முயற்சியில் பங்கெடுத்துள்ள சகல தமிழ்த்தேசியக் கட்சிகளிடமும் எழுத்துமூலம் ஒப்புதல் பெறுவது குறித்து தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஆலோசனை நடத்திவருகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை […]
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்கள் பதிவு

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று நேற்று வெள்ளிக்கிழமை (24) மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலக பிரதிநிதிகள்,சட்டத்தரணிகள் கலந்து கொண்டதோடு,மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களை தேடும் நூற்றுக்கணக்கான உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது மன்னார் மாவட்டத்தில் இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக 612 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவற்றில் 427 […]