இளைஞர்கள் போராட்டம்

திறைசேரி ஊடாக அண்மையில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் (Hackers) கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர் குழுவொன்று நேற்று (24) நிதியமைச்சின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் உடனடியாகப் பதவிலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

செட்டிபாளையம் கடற்கரை மீனவரை முழங்காலில் இருத்திச் சித்திரவதை: கடற்படை அதிகாரிக்கு பிணை

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியைக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தை மீண்டும் விசாரணை செய்து, 1994-ஆம் ஆண்டின் 22-ஆம் இலக்கச் சித்திரவதை தடுப்பு தண்டனைச் சட்டத்தின் கீழ் போதிய சாட்சியங்களுடன் எதிர்வரும் மே 22-ஆம் திகதி புதிய வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டார். செட்டிபாளையம் கடற்கரையில், கல்லடி கடற்படை […]

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் பணத்தை ஹேக்கர்கள் கைப்பற்றியது எப்படி?

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், நம்பகமான தரப்பாகத் தோன்றி போலியான தகவல்களை முன்வைத்த ஒரு தரப்பினரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, இழந்த பணத்தை மீண்டும் மீட்பது என்பது தொழில்நுட்ப ரீதியாகப் பெரும் சவால்கள் நிறைந்த ஒரு காரியம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் […]

அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள் மாவனெல்லையில் நிறைவு

‘ஏஹிபஸ்ஸிகோ’ அமைதி நடைபயணத்தின் மூன்றாம் நாள், நேற்று (24) மாலை மாவனெல்லை பெலிகம்மன ரஜமஹா விகாரையை சென்றடைந்ததுடன் நிறைவுற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமான இந்த நடைபயணம், நேற்றைய தினம் 25 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்யாகர தேரர் தலைமையிலான 13 பிக்குகளைக் கொண்ட குழுவினர், நேற்று காலை ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றனர். இதன்போது ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே […]