அறிமுகமாகும் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான அமைச்சின் தகவலில் மேலும், இந்த முயற்சி தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது பொது மக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் அட்டைகளுக்கு பதிலாக இது அறிமுகப்படுத்தப்படுவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு […]
சிறுமி மீது பேருந்தில் பாலியல் அத்துமீறல்: இராணுவச் சிப்பாய் கைது

பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில், 14 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி கடந்த 20-ஆம் திகதி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில், 14 வயதுச் சிறுமி தனது சிறிய தந்தையுடன் வாழைச்சேனையிலுள்ள வீட்டிற்குச் செல்வதற்காக ஏறியுள்ளார். அதேவேளை, விடுமுறை முடிந்து […]
பிற்போடப்பட்டுள்ள முக்கிய போட்டிப்பரீட்சை

இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப்பரீட்சை ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். நாளை (26) நடைபெறவிருந்த இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று காலை ( 25) அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட போட்டிப்பரீட்சைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பப்பிழை காரணமாகவே பரீட்சையை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்ததாகவும் விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், […]
கட்சி உறுப்பினர்களை அழைக்காமல் சுமந்திரன் கூட்டம் நடத்தினார்?

வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டமானது நேற்றுமுன்தினம்(23) இடம்பெற்ற நிலையில் பெரும்பாலான வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு கூட்டத்துக்கு அறிவித்தல் வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கே கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும், உப செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருக்கு அறிவிக்கவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கூட்டத்தில் தலைவர், செயலாளர் மற்றும் உபதலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தெரிவு செய்யப்பட்டன. குறித்த கூட்டம் நடைபெறுவதை அறிந்த சில கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை உறுப்பினர்கள் தாங்களாகவே கூட்டத்துக்கு […]
காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்: ஒண்டாரியோ நபர் மீது கொலை முயற்சி வழக்கு

கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள சம்மர்சைடு (Summerside) அருகே, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கியதாக ஒண்டாரியோவைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் என்ன?: வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், சம்மர்சைடில் உள்ள ஸ்லெமன் பூங்காவில் (Slemon Park) பணியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர், ஒரு நபர் தன்னைத் தாக்கியதாகக் கூறி காவல்துறையினரை அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சம்மர்சைடு மற்றும் […]
ஆட்சேபனைகளால் ஹட்டன் நகர சபை அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று(24.04.2026) நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது. எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபனைகளால் அமர்வை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. சபை செயல்படத் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், எந்தவித அபிவிருத்தியும் நடைபெறவில்லை என்றும், நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இங்கு உரையாற்றிய இ.தொ.கா உறுப்பினரும் உபதலைவருமான சுரேன், கடந்த சபை அறிக்கையில் பல […]
சித்திரைப் புத்தாண்டு விழாவில் மோதல்: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, அவர் தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தனது சகோதரனைக் […]
புதிய வகை டிஜிட்டல் மோசடி

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது உங்கள் நண்பரின் பெயரிலோ வரும் சந்தேகத்திற்குரிய “.apk” (dot apk) எனும் அபாயகரமான கோப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து திறந்தால், உங்கள் மொபைல் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் (Hackers) கைக்குச் சென்றுவிடும். இதன் மூலம் உங்கள் SMS செய்திகள் மற்றும் OTP குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் ஹேக்கர்களுக்குத் தெரிவதால், வங்கி கணக்குகளில் உள்ள […]
ஈரான்-, அமெரிக்கா-இரு தரப்பினரும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவார்களா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

இன்று (சனிக்கிழமை), அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்டக் குழுக்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளன. இருப்பினும், இரு தரப்பினரும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவார்களா என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. ஈரான் தரப்பு: ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளார். ஆனால், “அமெரிக்க அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவுமில்லை” என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது பாகிஸ்தான், ஓமன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான […]
ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று (25) நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் ஜயத்ர சம்பத் மிரண்டா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தப் பதக்கத்துடன் இலங்கை அணி இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. இதன் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் இலங்கை தற்போது 5வது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது இரண்டு […]