இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல் அறிமுகப்படுத்தப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சின் தகவலில் மேலும், இந்த முயற்சி தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இது பொது மக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிளாஸ்டிக் அட்டைகளுக்கு பதிலாக இது அறிமுகப்படுத்தப்படுவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை, இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை பொலிஸார் ஆகிய துறைகளுடன் இணைந்து தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.