சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணம்”

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள “சமாதான நடைபயணத்தை” (Walk for Peace) வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, பொதுமக்கள் ஒழுக்கத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நடைபயணம் முன்னெடுக்கப்படும் பாதையின் இருமருங்கிலும் திரண்டு கௌரவம் அளிக்கும் போது, கௌரவத்திற்குரிய பிக்குமார்களுக்கோ அல்லது தூதுக்குழுவினருக்கோ இடையூறு விளைவிக்காமல், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் வெளிநாட்டு தூதுக்குழுவினர், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க […]
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதைசுட்டிக்காட்டினார்ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விரிவாகத் தெரியப்படுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இரவு ஆளுநர் அவர்களுக்கும், பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். […]
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா – ஈரான்

அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ், ஈரான் சபாநாயகர் காலிபாஃப் இல்லாமல் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் ஈரானும் தயாராகியுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானுக்கு ஒரு “சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றுப்பயணத்தை” அறிவித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பிறகு, ஈரானுடனான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை பாகிஸ்தான் செல்வார்கள் என்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. சிறப்புத் தூதர் […]
விசேட சோதனை; 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது
பொலிஸாரால் நேற்றைய தினம் (24.04.2026) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 964 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை 965 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், நால்வர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக […]
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு திடீரென விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தலைமையிலான குழு

சுமார் 36 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் காரணமாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, ஒரு பெரிய கைத்தொழில் பேட்டையாக (Industrial Estate) உருவாக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய, பிரதி அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் தொழிற்சாலை வளாகத்திற்கு நேரடியாகச் சென்று கள விஜயம் மேற்கொண்டனர். காணி அளவு: தொழிற்சாலைக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் காணியில் இந்தத் தொழிற்சாலைப் பேட்டையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நோக்கம்: நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் […]
ஒலிபெருக்கி தொடர்பாக பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள சட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் அறிவிப்பின்படி, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு அமையும். * திங்கள் முதல் வியாழன் வரை: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. * வெள்ளி […]
நெல்லியடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நெல்லியடி பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகம் மற்றும் பலசரக்கு கடை என்பவற்றின் முகாமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. நெல்லியடி பொதுச்சுகாதார பரிசோதகர் ம.பிரபாகரனினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணையின் போது நீதவானால் முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. சித்திரை புதுவருட பண்டிகை நாட்களில் பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினரால் தொடர்ச்சியாக மேற்கொள்பப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சுகாதார சீர்கேடுகள் […]
2026 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; தமிழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நேற்றையதினம்(24.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் சார்பில், கடந்த 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் 2026 மே 18ஆம் […]
அம்பகாமத்தில் நீர் வழங்கப்படாத காரணத்தால் விவசாயம் பாதிப்பு

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் குளத்திற்கு கீழ் சிறுபோக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுள்ள தனக்கு விதைத்த நாள் தொடக்கம் இன்று வரை நீர் வழங்கப்படாத காரணத்தால் இரண்டு ஏக்கர் வயல் நிலம் அழியும் நிலையில் இருப்பதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார். கமக்கார அமைப்பும் கமநலசேவைகள் திணைக்களமும் தனக்கான சிறுபோக பங்கு நீரினை தர மறுத்து வருவதாகவும் பல தடவைகள் கேட்டும் வேலி அமைத்தால் மாத்திரமே நீர் வழங்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதால் வயல் எரிந்து […]
2.5 மில்லியன் டொலர் இணையக் கொள்ளை விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – பிரதி அமைச்சர்

அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை மடைமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். திறைசேரியால் செலுத்தப்பட்ட நிதி, இணையக் குற்றவாளிகளின் கைகளுக்குச் சென்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், நேற்று (24) நிதியமைச்சில் இது குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் […]