தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை!

தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.ஒருசில ஊடகங்கள் குறித்து அமைச்சர் லால் காந்த உட்பட பலர் ஊடகத்துறை அமைச்சுக்கு முறைப்பாடளித்துள்ளார்கள். ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் […]
மூதூர் நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து

திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி ஏ-15 வீதியில் பயணித்த பேருந்து ஒன்று கங்கைத்துறை பாலத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 22-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பேருந்தில் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இதில் பேருந்தின் சாரதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
$2.5 மில்லியன் நிதி மாயம்: நிதியமைச்சும் மத்திய வங்கியும் மௌனம் காப்பது ஏன்? – ஹர்ஷ டி சில்வா கேள்வி

பொது நிதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கே அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஹர்ஷ டி சில்வா, மக்களின் பணம் 2.5 மில்லியன் டாலர் மாயமானது குறித்து நிதியமைச்சும் மத்திய வங்கியும் இதுவரை மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஹர்ஷ டி சில்வாவின் முக்கிய குற்றச்சாட்டுகள்: அலட்சியம் மற்றும் தோல்வி: “இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல, ஏற்கனவே நாங்கள் எச்சரித்த ஒரு தோல்வி. கடன் மேலாண்மைப் பிரிவை மத்திய வங்கியிலிருந்து திறைசேரியின் பொதுக் கடன் […]
காணாமல் போன 2.5 மில்லியன்டாலர்: நிதியமைச்சு விளக்கம் அளிக்கும் என அமைச்சர் நளிந்த உறுதி

கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி கணினி ஊடுருவிகளிடம் சிக்கியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நிதியமைச்சு மிக விரைவில் தெளிவான விளக்கத்தை அளிக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் இந்தச் சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் அமைச்சரவைக்கு அறிக்கையிடப்படவில்லை என்றும் இது தொடர்பான உண்மைகளை நிதியமைச்சு விரைவில் விளக்கும் என்றும் கூறினார். விசாரணைக் குழு: இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி […]
நிதித் திருட்டு: சட்ட நடவடிக்கை மற்றும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியது நிதியமைச்சு

கணினி ஊடுருவிகளால் (Cyber hackers) வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பு ஊடுருவப்பட்டு நிதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சட்ட அமலாக்க முகவர் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. 2026 ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி கொடுப்பனவு ஒன்றில் கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தத் திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: புகார் அளிப்பு: இந்தச் சம்பவம் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை […]
பல பகுதிகளில் பிற்பகல் மழை

ட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் குருநாகல் […]
அரக்சி மற்றும் விஜிதவிற்கு இடையில் தொலைபேசி உரையாடல்

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ‘IRIS Dena’ கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அக்கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார் என இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதுடன், ‘IRIS Dena’ கப்பல் மீதான […]