மாற்றத்தை உருவாக்குவது நம் கையில்! தனது வாக்கை பதிவு செய்த பின் சீமான் உருக்கம்

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயகத் திருவிழாவின் ஒரு பகுதியாக, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதியின் வேட்பாளருமான சீமான், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி கயல்விழியும் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் […]

திறைசேரி கணினி கட்டமைப்பு ஊடுருவல்: மின்னஞ்சல் ஊடாக நிதி திருடப்பட்ட விபரம் அம்பலம்

நிதி அமைச்சின் கீழ் உள்ள வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் ஊடுருவி மேற்கொண்ட நிதி திருட்டு குறித்து சட்ட அமலாக்க முகவர் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதி நிதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும் (Australian Export Finance Agency) இலங்கை திறைசேரிக்கும் இடையில் கடன் தவணை செலுத்துதல் தொடர்பாக மின்னஞ்சல் (Email) வாயிலாகத் தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. இந்தத் தொடர்பு வழியைப் பயன்படுத்திய ஹேக்கர்கள், தகவல்களைச் […]

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்; ஆயுதங்களை வைத்து சிக்கவைக்க சதி – விசாரணைகளுக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைநீதிமன்றத்தில் அம்பலம்

2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல்  தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பல சாட்சிகள் தங்கள் சாட்சியங்களைத் திரும்பப் பெறுமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களை வைத்து சிக்கவைக்கும் சதி: கடந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஒரு சாட்சியின் வீட்டிற்குச் சென்ற இராணுவப் […]

தெற்கில் தமிழர் விரோத அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தெற்கில் தமிழர் விரோத அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு செய்யமாட்டோம். எம்மிடம் இனவாதம் கிடையாது. தேசிய மக்கள் சக்தி இலங்கை மக்களுக்கான கட்சியாகும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஊடாக 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குற்காட்டுவான் இறங்குதுறை புனரமைப்பின் இரண்டாவது கட்டப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் […]

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்; 10 நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகளுடன் சர்வதேச குழு வருகை

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளை 10 நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகளைக் கொண்ட சர்வதேசக் குழு சென்னையில் நேற்று பார்வையிட்டது. தமிழகம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் 2-ம் கட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம், புதுடெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் இந்தத் திட்டத்தை, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் 2-ம் கட்டத்தில் சர்வதேச ஜனநாயக […]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள். தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், […]

பிரதமரின் செயலாளரின் கணவன் எனக் கூறி மோசடி செய்ய முற்பட்டவர் கைது

ரதமர் ஹரிணி அமரசூரியவின் தனிப்பட்ட செயலாளரின் கணவர் எனத் தன்னைக் காட்டிக்கொண்டு, கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முயன்ற சந்தேக நபர் ஒருவரை, கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தன்னை இலங்கை விமானப்படையின் ‘விங் கமாண்டர்’ (Wing Commander) எனப் பொய் கூறி பாடசாலை அதிபரை அணுகியுள்ளார். […]

தேநீர்ப் பைகளில் புற்றுநோய்க் காரணிகள்?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேநீர் பைகள் (Tea bags), ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கான நுண்நெகிழித் துகள்களை வெளியேற்றுவதாகவும், இது மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்றும் புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நானோபிளாஸ்டிக் எனப்படும் இந்த மிகச்சிறிய துகள்கள், தேநீரை அருந்தும்போது மனித உடலின் திசுக்களில் தங்கிவிடுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த நுண்நெகிழித் துகள்களின் நீண்டகால பாதிப்புகள் குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் தேவைப்பட்டாலும், ஆரம்பகட்ட ஆதாரங்கள் இவை புற்றுநோய் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் […]

நீதிமன்றக் களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி; முன்னாள் நீதிவானுக்கு விளக்கமறியல்

களுவாஞ்சிக்குடி நீதிமன்றக் களஞ்சியசாலைப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுச் சொத்துகளைக் கையாடல் செய்தமை தொடர்பான இந்த வழக்கு, நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள் நீதிவான் ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் ‘நகர்த்தல் மனு’ ஒன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார். களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு […]

திறப்பனையில் கோழிக்கூட்டுக்குள் சிக்கிய சிறுத்தை

அநுராதபுரம் ,திறப்பனை பகுதியில் உள்ள வீடொன்றின் கோழிக்கூட்டுக்குள் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்று, செவ்வாய்க்கிழமை அன்று வனவிலங்கு அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. திறப்பனை, கல்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் கோழிக்கூட்டுக்குள் நுழைந்த முதிர்ச்சியடைந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த கோழிகளைத் தாக்கியுள்ளதுடன் இதில் ஐந்து கோழிகள் உயிரிழந்துள்ள நிலையில் சிறுத்தை கூண்டுக்குள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய திறப்பனை வனவிலங்கு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி பி.ஏ.பி. அத்துகோரல தலைமையிலான குழுவினர், குறித்த இடத்திற்கு விரைந்து சிறுத்தையை மீட்டுள்ளனர். அத்துடன் அழிந்து […]