“தேர்தலை ரத்து செய்யாதீர்; வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்!” – கோவை தெற்கில் நாம் தமிழர் கட்சி புதிய ட்விஸ்ட்!

கோவை, கோவை தெற்கு தொகுதியில் திமுக – அதிமுக இடையே மூண்டுள்ள மோதல், தற்போது நாம் தமிழர் கட்சியின் என்ட்ரியால் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணாவில் ஈடுபட்டதோடு, தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “திமுக, […]
இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தவில்லை – டக்ளஸ் தேவானந்தா

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பைத் தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், இச்சந்திப்பானது தமக்கிடையிலான ‘குடுமிச் சண்டைக்கு’த் தீர்வு கோருவதாகவே அமைந்திருந்தது என்றும் அவர் சாடியுள்ளார். இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை வருகை மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “இந்தியாவின் துணை ஜனாதிபதி இலங்கை வந்திருந்தபோது, அவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைத் தமிழ் […]
செம்மணி புதைகுழி விவகாரம்: மரபணு பரிசோதனை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் மரபணு (DNA) பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விசாரணை: செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டத்தரணிகளின் வாதம்: ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிநடத்தலில் முன்னிலையான சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான், மரபணு பரிசோதனையின் அவசியம் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு […]
அமைச்சர் பிமல் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் கூட்டம் – ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் விஜயம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அரச நிகழ்வுகளில் பங்கேற்றார். இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண நகரத் திட்டம் குறித்தக் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள்: இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண […]
விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு.

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட 2K Agro Products Ltd நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அகியோரின் விசேட பங்கேற்புடன் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை காலை நிறுவனத்தின் வளாகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 17 பட்டியலிடப்படாத பொதுக் கம்பனிகளில் ஒன்றான […]
மாகாண காணி ஆணையாளர் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாகாண காணி ஆணையாளர் திணைக்கள மாதாந்த செயலாற்றுகை கலந்துரையாடல் இன்றைய தினம் (22.04.2026) மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் மாகாண காணி ஆணையாளர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் பல வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள காணிப் பிணக்குகள் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக தரவுகள் […]
“ஜூலிக்கு வெக்கமா இல்லையா?” – விஜய்க்காக வனிதா விஜயகுமார் ஆவேசம்! “அவர் எங்களையே கண்டுக்க மாட்டார்” என ஓபன் டாக்!

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் மேடைகளில் கூறும் ‘குட்டி ஸ்டோரி’கள் விவாதப் பொருளாகி வரும் நிலையில், பிக் பாஸ் ஜூலி விஜய்க்கு எதிராகத் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, ஜல்லிக்கட்டு காளை குறித்து விஜய் சொன்ன கதை ஆபத்தானது என ஜூலி விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. வனிதா தனது பேட்டியில், “ஜூலிக்கு எதிராக வரும் கமெண்ட்கள் […]
உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் நெதன்யாகு – புடின் – ட்ரம்ப் முக்கியபங்கு! – அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

இஸ்ரேல், ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் உலகளாவிய மனித உரிமைகளை அழிப்பதில் முன்னணியில் இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) கடுமையாகச் சாடியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தனது வருடாந்த அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரை “வெறிபிடித்த வேட்டைக்காரர்கள்” என அந்த அமைப்பு வர்ணித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய ஈரான்! பேச்சுவார்த்தைகள் கைகூடாத […]
எதிர்வரும் 26ம் திகதி: தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்த விருது விழா

தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் வருடாந்திர ‘தந்தை செல்வா ஞாபகார்த்த நினைவுப் பரிசில்கள்’ வழங்கும் விழா, எதிர்வரும் 26.04.2026 அன்று மாலை 3:00 மணிக்கு கொழும்பு-14, கலைமகள் தமிழ் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மன்றத்தின் தலைவர் வீ. செல்வநாயகம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. மன்றத்தின் முன்னாள் தலைவர் அமரர் சந்தனம் அவர்களின் தன்னலமற்ற சேவைகளைக் கௌரவிக்கும் முகமாக, அன்றைய தினம் பாடசாலைப் பிரதான மண்டபம் ‘சந்தனம் அரங்கு’ எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதம அதிதி: […]
மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ

கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அக் கட்டிடம் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளது. மெனிக்ஹின்ன நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மிக வேகமாக பரவியதன் காரணமாக கட்டிடத்தில் இருந்த ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் […]