கோவை,
கோவை தெற்கு தொகுதியில் திமுக – அதிமுக இடையே மூண்டுள்ள மோதல், தற்போது நாம் தமிழர் கட்சியின் என்ட்ரியால் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாகக் கூறி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் தர்ணாவில் ஈடுபட்டதோடு, தேர்தலையே ரத்து செய்ய வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்குப் பணப்பட்டுவாடா செய்கின்றன. இதற்காக ஒட்டுமொத்தத் தேர்தலையும் ரத்து செய்யக் கூடாது. தேர்தலை நம்பி எங்களைப் போன்ற வேட்பாளர்கள் மிகக் கடினமாக உழைத்துள்ளோம்.
எனவே, தேர்தல் விதிகளை மீறிப் பணப்பட்டுவாடா செய்யும் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தவறு செய்த வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, திட்டமிட்டபடி தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தலை ரத்து செய்யக் கோரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோருவது கோவை தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#CoimbatoreSouth #NTK #NaamTamilarKatchi #Seeman #AmmanArjunan #CoimbatorePolitics #TNElection2026 #ElectionCommission #PollControversy #DMK #AIADMK #TamilPolitics #VoteForNTK #CashForVote #CoimbatoreNews #ElectionUpdate #BreakingNews #PoliticalTwist #DemocraticDuty #TNElections