நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்” என பாஜக மாநில துணைத் தலை​வர் குஷ்பு தெரி​வித்​தார். இது தொடர்​பாக நேற்று கோவில்பட்டி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: மத்​திய அரசு எந்​தவொரு சட்​டம் கொண்டு வந்​தா​லும் திமுக எதிர்ப்பு தெரிவிக்​கிறது. அவர்​களால் செய்ய முடி​யாததை மத்​திய அரசு செய்து கொண்​டுள்​ளது. தொகுதி மறு​வரையறை சட்​டத்​தால் திமுக-வுக்கு மட்​டும்​தான் பாதிப்பு உள்​ள​தா? இந்​தியா முழு​வதும் வேறு […]

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரமசிவத்தை ஆதரித்து இன்று வெள்ளிக்கிழமை (ஏப்.17) காலை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அமலாக்கத் துறையை முதன்முதலாக வேடசந்தூருக்கு அழைத்துவந்து இரண்டு நாட்கள் ரெய்டு […]

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?,” என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசினார். தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்களவை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த […]

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் கை சந்தித்தார் இலங்கையின் ஐ.நா தூதுவர்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதியும் தூதுவருமான சுமித் தஸநாயக்க, ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டேர்க் குடன் (Volker Türk) அண்மையில் (13ஆம் திகதி) ஆக்கபூர்வமான சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். ஜெனீவாவில் உள்ள பாலே வில்சன்’ (Palais Wilson) கட்டிடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து தூதுவர் தஸநாயக்க உயர் ஆணையாளருக்கு விளக்கமளித்ததுடன், இருதரப்பு நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார் என ஜெனவாவிலுள்ள இலங்கையின் […]

கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்ததாவது, முதலாம் தர மாணவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்கான பயிற்சி நூல்கள் (Activity Books) விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்தப் பயிற்சி நூல்களை விநியோகித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய பாடத்திட்டம் தொடர்பான […]

வெலிக்கடை சிறைச்சாலையில் பிள்ளையானை வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்!

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை முதல் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியின் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி (சதா)

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு கனகரத்தினம் சதானந்தமூர்த்தி அவர்கள் 16-4-2026 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சண்முகராஜா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி(கௌரி) அவர்களின் அன்புக் கணவரும், சஜிந்தன், காயகா, விஜிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், தட்சணாமூர்த்தி, செம்பொற்சோதி, ரூபகலா, மங்களகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராசமலர், நவநீதன், வித்தியகலா, தயாபரன், செந்தா, தியாகராஜா, கருணாகரன், கிருபாகரன் […]

தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன அறுவரின் சடலங்கள் மீட்பு

கொபேகனே (Kobeigane), குராட்டியகஹமுல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் நான்கு ஆண்களும் அடங்குவர். நேற்று (16) மாலை நீராடச் சென்ற இந்தக் குழுவினர் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அன்று முதல் அவர்கள் காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட சடலங்கள்: 6 (2 பெண்கள், 4 ஆண்கள்)காணாமல் போனவர்கள்: 2 பேர் (இன்னும் தேடப்பட்டு வருகின்றனர்)காப்பாற்றப்பட்டவர்கள்: 2 பேர் (தற்போது […]

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை – வழக்குவிசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை அறிக்கை இன்னும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த […]

புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களிடமிருந்து மூன்று வாள்களைக் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.