நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்னைய எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் நடைமுறைக்கு வரும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் நாளை வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது QR முறைமையைக் கருத்தில் கொள்ளாதிருக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. எவ்வாறாயினும், அந்த காலப்பகுதியில் […]

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு பெண்களும், போதகர் உள்ளிட்ட மூன்று ஆண்களும் வான் ஒன்றில் வீடு திரும்பினார்கள். […]

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை த.வெ.க. தலைவர் விஜய் நேற்று (16) வெளியிட்டார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டார், தொடர்ந்து விவசாயி நாராயணனுக்கு விஜய் சிறப்பு செய்தார். தொடர்ந்து […]

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கள் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: விபத்துக்களுக்கான காரணங்கள்: நீச்சல் தெரியாமை, ஆள் நடமாட்டமற்ற பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுதல் மற்றும் மதுபோதையில் நீரில் இறங்குதல் ஆகியவையே இத்தகைய மரணங்களுக்கு முக்கிய காரணங்களாகும். பொதுமக்களுக்கான வேண்டுகோள்: பொதுமக்கள் நீராடுவதற்கு முன்னர் […]

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு: நிலக்கரி கொள்வனவு தொடர்பான தற்போதைய விசாரணைகள் மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிகள் குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்ட பின்னணியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன விசாரணை: நடைபெறவுள்ள விசாரணைகள் எவ்விதத் தாக்கமும் இன்றி […]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 17) நிராகரித்துள்ளது. லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர் சார்பிலான சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை ஆய்வு செய்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த […]

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நடந்துள்ளனவா என்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமித்துள்ளார். இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது முதல் 2026 ஏப்ரல் 16 வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்ற செயல்பாடுகள் இந்த விசாரணையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1978 ஆம் ஆண்டின் […]

15 வயது மாணவி சடலமாக மீட்பு

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம் தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்டத்தின் ராணி தோட்டப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த விதம்: சிறுமி காணாமல் போனது தெரியவந்ததையடுத்து, உறவினர்களும் அப்பகுதி மக்களும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன்போது, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் கரையில் சிறுமியின் பாதணிகள் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், அவர் நீரில் குதித்திருக்கலாம் […]

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2026 வசந்தகாலக் கூட்டத்தின் (Spring Meetings) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய IMF இன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், நீண்டகால வளர்ச்சி மற்றும் மீண்டெழும் திறனை உறுதிப்படுத்தத் தொடர்ச்சியான […]

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: கல்வி ஒன்றே விடுதலை தரும் என நம்பியவர் அம்பேத்கர். புத்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் தான் அவரை மாற்றியது. […]