புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களிடமிருந்து மூன்று வாள்களைக் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் – விகாராதிபதி

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர். அதன் அடிப்படையில் இன்றைய […]

பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்து; ஒருவர் பலி மூவர் காயம்

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து, கெசல்கமுவ ஓயாவில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (17) காலை 8 மணியளவில் இடம்பெற்றது. பலாங்கொட பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்ததோடு, காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் என மூன்று […]

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம் வாரீர்!” மலையகப் பெருந்தோட்ட மக்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வரும் அடிப்படைச் சுயவுரிமைப் பிரச்சினைகளில் முதன்மையானது நில உரிமை மற்றும் வீட்டுரிமை ஆகும். இது குறித்து சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் தோழர் S.T. கணேஷலிங்கம் (சிப்ஸ் நிறுவனம்) மற்றும் தேசிய நாடகக் கலைஞர் தோழர் […]

உச்சம் தொடும் வெப்பம்

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவுறுத்தலின்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டத்திலும் இந்த வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பச் சுட்டெண் அதிகரிப்பதன் காரணமாக, நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு அதிக உடல் சோர்வு ஏற்படக்கூடும். அத்துடன், இக்காலப்பகுதியில் […]

பம்பரக்கலை குடியிருப்பு பகுதியில் தீ

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள் மற்றும் உடமைகள் முற்றாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளன. குறித்த பகுதியில் நேற்று மாலை 7.30 மணி அளவில் திடீரென தீ பரவல் ஏற்பட்டதால் மூன்று வீடுகளின் உடமைகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அதேநேரம் தீ விபத்து […]

லக்னோவை வென்ற பெங்களூர்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பெங்களூரு லக்னோ: 146/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மாஷ் 40 (32), முகுல் சோத்ரி 39 (28), ஆயுஷ் படோனி 38 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரசிக் சலாம் 4/24 [4], புவ்னேஷ்வர் குமார் 3/27 [4], க்ருனால் பாண்டியா 2/38 [4], ஜொஷ் ஹேசில்வூட் […]

கனடாவால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது ஆர்டெமிஸ் II – விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன்

நாசாவின் (NASA) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவுப் பயணத்தில் தனது பங்களிப்பானது, கனடா ஒரு நாடாக “பெரிய காரியங்களைச் செய்ய முடியும்” என்பதற்கான சான்று என்று கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் தெரிவித்துள்ளார். மேலும் இது அடுத்தடுத்த பெரிய சாதனைகளுக்கு உத்வேகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பூமிக்குத் திரும்பிய ஒரு வாரத்திற்குப் பிறகு, ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் குளோபல் நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நிலவின் […]

அம்ஹெர்ஸ்ட் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் உட்பட மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

நோவா ஸ்கோடியா (N.S.), அம்ஹெர்ஸ்ட் நகரில் இந்த வார தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது காவல்துறை கொலைக் குற்றம் சுமத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு அம்ஹெர்ஸ்டில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 41 வயதான கிறிஸ்டோபர் லெகெட் (Christopher Leggett) உயிரிழந்தார். இந்த மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் என்று கருதப்படும் மூவருக்கு எதிராக வியாழக்கிழமை காலை பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது இருவர் காவலில் உள்ளனர், ஒருவர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார். கைது மற்றும் […]

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது!

இஸ்ரேல் மற்றும் லெபனான் நேரப்படி இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. கால எல்லை: இந்த போர்நிறுத்தம் முதற்கட்டமாக 10 நாட்களுக்கு நீடிக்கும். எனினும், இது மேலும் நீட்டிக்கப்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்து: லெபனானுடன் ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கைக்கான” வாய்ப்பை இது உருவாக்கும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவின் நிலைப்பாடு: ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இந்த போர்நிறுத்தத்தை கடைபிடிக்க ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், […]