மீண்டும் உயரும் மசகு எண்ணெய் விலை

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 7% அதிகரித்து, அதன் புதிய விலை 102 டொலர்களாகக் காணப்படுகிறது. டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் விலை 8% […]

சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

புத்தாண்டு காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளின் போது இடம்பெறும் விபத்துகளைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றாத நோய்கள் பிரிவினால் இந்த வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. இதில் விழாக்களை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய பொதுவான வழிமுறைகள் மற்றும் குறிப்பிட்ட சில விளையாட்டு நிகழ்வுகளுக்கான விசேட வழிகாட்டல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. குறுந்தூர ஓட்டம் , மரத்தன் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் பந்தயம் போன்ற […]

30,000 மெட்ரிக் தொன் எரிபொருள் மின் உற்பத்திக்காக வந்தடைந்தது!

ன்சார உற்பத்திக்காக 30,000 மெட்ரிக் தொன் ‘பர்னஸ்’ (Furnace Oil) எரிபொருளைத் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் நேற்று (12) நாட்டை வந்தடைந்ததாக இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தின் (CPC) மேலாளர் பணிப்பாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்தார். இதனையடுத்து, கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய முனையத்திற்கு எரிபொருளை மாற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 19; உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனை தினமாக அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப் பிரார்த்தனை தினமாக இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்பார்ப்பது போல, இந்தத் தாக்குதல்கள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு இறைவனிடம் வேண்டி, இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலக்கரி கேள்வி மனு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஐக்கிய மக்கள் சக்திமுறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முக்கிய உறுப்பினர்கள் சிலர், நிலக்கரி கொள்முதல் நடைமுறை தொடர்பான சர்ச்சைக்கிற்குரிய குரல் பதிவு குறித்து விசாரணை கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், குறித்த குரல் பதிவின் மூலம் இந்த டெண்டர் ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவருவதாகக் குறிப்பிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த வருண ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் […]

தமிழரசுக்கட்சியின் முடிவுக்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி காத்திருப்பு

தமிழரசுக்கட்சி – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இரு தரப்பினரும் இணைந்து செயற்படுவது, பொதுச்சின்னத்தைப் பயன்படுத்துவது மற்றும் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரிலேயே தொடர்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து இறுதி முடிவெடுக்க தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவைக் கூட்ட வேண்டியுள்ளது. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாகத் தெளிவான முடிவு எட்டப்படாததால், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி தனது கட்சியை மட்டும் […]

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் […]

இன்று லிபரல் கட்சி பெரும்பான்மை அரசை அமைக்கக்கூடும்?

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சி, இன்றைய (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை (Majority Government) அமைக்கும் விளிம்பில் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு லிபரல் கட்சி எட்டவுள்ள ஒரு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் நிலவரம்: இன்று கனடாவின் மூன்று தொகுதிகளில் (கியூபெக்கின் Terrebonne உட்பட) இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. 343 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்கள் தேவை. தற்போது லிபரல் […]

நாடாளுமன்ற பெண் ஊழியர் துன்புறுத்தல் விவகாரம் குறித்து ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை?

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல் தொடர்பிலான விசாரணையின் முக்கிய பரிந்துரைகள், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்தும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் சுஜாதா அழகப்பெருமவினால் தயாரிக்கப்பட்ட இந்த விசாரணை அறிக்கை, கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து இதில் ஆராயப்பட்டது. ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் […]

சுகாதாரத் துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்கிறது – வைத்தியர் சங்கம் எச்சரிக்கை

இலங்கையின் சுகாதாரத் துறையானது மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் தட்டுப்பாடு, அத்தியாவசிய உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பாரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. புற்றுநோய் மருந்துகள் உட்பட பல முக்கிய வகை மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது நோயாளிகளின் பராமரிப்பைப் பாரியளவில் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டில் கணிசமான […]