உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப் பிரார்த்தனை தினமாக இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்பார்ப்பது போல, இந்தத் தாக்குதல்கள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு இறைவனிடம் வேண்டி, இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.