நைஜீரிய விமானப்படைத் தாக்குதல்; 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அந்நாட்டு இராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நைஜீரிய இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் சானி உபா கூறுகையில், போர்னோ மாநிலத்தில் உள்ள ஜில்லி பகுதிக்கு அருகில் கைவிடப்பட்ட ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் தளம் மற்றும் தளவாட மையம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்த ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் கடத்தல் முயன்றவர் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், பெருந்தொகையிலான கொக்கெய்ன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற பெண் ஒருவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்: உகாண்டாவைச் சேர்ந்த 47 வயதுடைய பெண். இவர் கட்டார் ஏர்வேஸ் (QR664) விமானம் மூலம் தோஹா வழியாக இலங்கை வந்துள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்: குறித்த பெண்ணின் உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கொக்கெய்ன் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த எடை 274 கிராம் ஆகும். […]
ஐபிஎல் 2026: டக்-அவுட்டில் கைபேசி பயன்படுத்திய விவகாரம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகாரியை விசாரணை

குவஹாத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் (Romi Bhinder) கைபேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தற்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு (ACSU), இது தொடர்பாக ரோமி பிந்தருக்கு ‘காரணம் காட்டும்’ நோட்டீஸை வழங்கியுள்ளது. இதற்கு 48 மணி நேரத்திற்குள் அவர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. : […]
ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும்; கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை – வைகோ

”தமிழகத்தில் ஸ்டாலினின் ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சிற்கு இடமில்லை ” என மதிமுகவின் பொதுச்செயலாளரான வைகோ பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக எதிர்வரும் 23 ஆம் திகதியன்று பொது தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே. என். நேருவை ஆதரித்து திருச்சி […]
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் முதல்முறையாக பொண்ணொருவர் தளபதியாக நியமனம்

அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக இராணுவத்தை வழி நடத்த ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோயில் (Susan Coyle), வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்பார் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ளார். ஆஸ்திரேலிய இராணுவத்தில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை […]
விசேட சோதனைகள்; நுகர்வோர் பாதுகாப்பு ஏப்ரல் 30 வரை நீடிப்பு

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் சுமார் 2,000 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபையின் தகவல் மற்றும் நுகர்வோர் விவகார பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். இது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார மேலும் […]
மேலதிக பஸ்கள் சேவையில்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நேற்று (12) மாலை முதல் குறைவடைந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார். கடந்த சில நாட்களில் வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. இன்றைய தினமும் பயணிகளின் […]
தமிழர்களையும் ஒடுக்குவதற்கே அரசை பாதுகாப்பதற்கான சட்டம் – அருட்தந்தை சத்திவேல்

அரசை பாதுகாப்பதற்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெடுக்கு நாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்திற்குரியவை. அதனை பாதுகாக்க வர்த்தமானி அறிவித்தல் வரும்” என புத்தசாசன அமைச்சர் கூறி […]
நீரிணை முற்றுகை; அவுஸ்திரேலிய பிரதமரின் கருத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிடும் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அதற்கு முக்கிய பதில் அளித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாமல் தோல்வியில் முடிந்துள்ளன. இதையடுத்து, ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிட அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இன்று இரவு முதல் அமெரிக்க கடற்படைகள் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளின் கப்பல் […]
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிப்பு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. : இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 239 தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. தாமதம்: சீரற்ற காலநிலை மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் மூன்றாம் கட்டப் பணிகள் இதுவரை தள்ளிப்போடப்பட்டன. அடுத்த கட்டம்: இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பணிகளைத் தொடங்கத் […]