பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முகத்தில், கூட்டத்திலிருந்து வீசப்பட்ட செல்போன் ஒன்று பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறனை […]
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி; ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஈரான் ஜனாதிபதி அவசர ஆலோசனை

பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும், போர்நிறுத்தத்தின் தற்போதைய நிலை குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்ததாக ஈரான் ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக ஆயுதப் பரிமாற்றங்களில் […]
டெல்டா அலெக்ஸ் பிரேசர் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

டெல்டா (Delta) பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துக்கு அதிக வேகம் மற்றும் மதுபோதை காரணமாக இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. சனிக்கிழமை இரவு சுமார் 10:00 மணியளவில், அலெக்ஸ் பிரேசர் பாலத்தின் வடக்கு நோக்கிய பாதையில் (Northbound lanes), மோட்டார் சைக்கிள் ஒன்று அரை-சரக்குந்து (Semi-truck) ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. “மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 31 வயதுடைய நபர் […]
மேற்கு வான்கூவர் யூத வழிபாட்டுத் தல வாகன தரிப்பிடத்தில் தீ விபத்து திட்டமிட்ட ஒன்றல்ல – பொலிஸார்

மேற்கு வான்கூவர் (West Vancouver) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலம் (Synagogue) ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கார் தீ விபத்தானது, ஒரு குற்றச்செயலோ அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றோ அல்ல என மேற்கு வான்கூவர் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘ஹார் எல்’ (Har El) வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே அதிகாலை 6:30 மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிவது கண்டறியப்பட்டது. தீயணைப்புப் படையினரால் தீ உடனடியாக அணைக்கப்பட்டதுடன், இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் […]
தொல்புரத்தில் இளைஞன் படுகொலை; இருவர் படுகாயம்

யாழில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று (13) இரவு 11 மணியளவில் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் பதிவாகியுள்ளது. தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முரண்பாடு […]
கொக்குத்தொடுவாயில் சட்டவிரோத உப்பள விவகாரம் குறித்து சுமந்திரன் ஆராய்வு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், குஞ்சுக்கால்வெளிப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை மகாவலி அதிகாரசபை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புசெய்து பெரும்பான்மைஇனத்தவருக்கு உப்பளம் அமைப்பதற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆராய்ந்துள்ளார். அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்த மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பள விவகாரம் தொடர்பில் சுமந்திரன் கேட்டறிந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பொதுமக்கள் […]
இன்று முதல் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடும் – அமெரிக்க இராணுவம்

ஈரானிய துறைமுகங்களுக்கான முற்றுகையைத் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) தொடங்கவுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும், பிற நாடுகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிச் செல்வதை இது “தடுக்காது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. : ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல் போக்குவரத்தை முடக்கும் நடவடிக்கை திங்கட்கிழமை கிழக்கு நேரப்படி (ET) காலை 10:00 மணிக்கும் (GMT 14:00), இலங்கை நேரப்படி மாலை 7:30 மணிக்கும் தொடங்கும் என அமெரிக்க மத்திய […]
ஏற்படப்போகும் மின்சார இழப்பு – சம்பிக்க எச்சரிக்கை

தேசிய மின்சார கட்டமைப்புக்கு எதிர்வரும் காலங்களில் 250 ஜிகாவோட் மின்சாரம் இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல், மே, மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் சுமார் 250 ஜிகாவோட் மணிநேர மின்சாரம் இழப்பு ஏற்படலாம் என குறிப்பிடுகிறார். நெசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் தனியார் நிறுவனம் (NSO) மின் உற்பத்தி நிலைய முகாமைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள தரவுகளை கொண்டே சம்பிக்க ரணவக்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இவை அந்நிறுவனத்தின் […]
லொத்தர் சீட்டுப் பணத்துடன் சென்ற இளைஞன் விபத்தில் பலி
தென்னிலங்கையில் லொத்தர் சீட்டிழுப்பில் 10 லட்சம் ரூபாய் பணப்பரிசை வென்ற இளைஞன், குறித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹொரண – பொக்குணுவிட்ட, வெலிகம்பிட்டிய பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சண்முகம் ஆனந்த என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது நண்பரான 24 வயதுடைய இளைஞனுடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோதே […]
இளவாலையில் கைத்துப்பாக்கி மீட்பு

ழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று இன்று (13) மீட்கப்பட்டுள்ளது. இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட துப்பாக்கி எதற்காக அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா? அல்லது வேறு நபர்களிடமிருந்து கைமாற்றப்பட்டதா? போன்ற பல கோணங்களில் இளவாலைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்புடைய சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]