பிராம்ப்டன் ஏரியில் படகு கவிழ்ந்து ஒருவர் பலி: பீல் பொலிஸார் தகவல்

ஒன்ராறியோவின் பிராம்ப்டன் நகரில் உள்ள ஹார்ட் லேக் (Heart Lake) பாதுகாப்புப் பகுதியில் சனிக்கிழமை இரவு ஒரு சிறிய படகு (Canoe) கவிழ்ந்ததில் மாயமான நபர், ஞாயிற்றுக்கிழமை மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில் ஹார்ட் லேக் ஏரியில் ஒரு ஆணும் பெண்ணும் ஆபத்தான நிலையில் தத்தளிப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அருகில் இருந்தவர்கள் இதனைப் பார்த்துவிட்டு அவசர உதவியை நாடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், 30 வயது மதிக்கத்தக்க […]
கியூபெக் மாகாணத்தின் புதிய பிரதமராக கிறிஸ்டின் பிரெஷெட்!

கியூபெக் மாகாணத்தின் ஆளும் கட்சியான Coalition Avenir Québec (CAQ) கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) மாகாணத்தின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்மன்ட்வில் (Drummondville) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி மாநாட்டில், கிறிஸ்டின் பிரெஷெட் 57.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெர்னார்ட் டிரெய்ன்விலை (Bernard Drainville) தோற்கடித்தார். கியூபெக் மாகாண வரலாற்றில் பிரதமராகும் இரண்டாவது பெண்மணி […]
840-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுடன் கைது!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 847 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 06 பேரும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 03 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 854 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக […]
அமெரிக்கா அறிவித்துள்ள கப்பல் முற்றுகை நடவடிக்கையில் பங்கேற்கப் போவதில்லை – பிரித்தானியா

ரான் உடனான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கா அறிவித்துள்ள கப்பல் முற்றுகை நடவடிக்கையில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனப் பிரித்தானியா அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்கா – பிரித்தானியா இடையிலான நீண்டகால உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 21 மணிநேரமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. “அணுஆயுதங்களை உருவாக்க மாட்டோம்” என்ற […]
வடமராட்சி கிழக்கில் மின்கம்பத்துடன் மோதி வாகனம் சுக்குநூறு

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில், வாகனத்தில் பயணித்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் இன்று பகல் குறித்த வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல (Overtake) முயன்றுள்ளது. இதன்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அதிவேகமாகச் சென்று வீதியோரத்திலிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. மின்கம்பத்துடன் மோதிய வேகத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி, அதன் முன்பகுதி முழுமையாக நசுங்கியுள்ளது. விபத்தின் தாக்கத்தினால் […]
எமது காணிகளின் எல்லைகள் அழிக்கப்பட்டுள்ளன மீள அடையாளம் கண்டு அளவீடு செய்யப்பட வேண்டும் – தையிட்டி காணி உரிமையாளர்கள்

எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக் தினத்திற்கு முன்னர் எமது காணிகளை கையளிப்பார்கள் என நம்புகிறோம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும், கடற்தொழில் அமைச்சர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர், நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலின் […]
சனநெரிசலில் சிக்கி ஹெய்ட்டியில் 30 பேர் உயிரிழப்பு

ஹெய்ட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர சனநெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஹெய்ட்டியின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஜான் ஹென்றி பெட்டிட் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் உள்ள லாபெரியர் சிட்டடெல் கோட்டையிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரான்ஸிடம் இருந்து ஹெய்ட்டி சுதந்திரம் பெற்ற சில காலத்திலேயே இந்தக் கோட்டை கட்டப்பட்டது. யுனெஸ்கோ […]
ஹோர்முஸ் நீரிணை குறித்து இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அதன்படி, போர்நிறுத்தம் மீறப்பட்டால், அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அந்தப் படை வலியுறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கக் கடற்படை ஹோர்முஸ் ஜலசந்தியைத் தடுத்துள்ளது என்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிக்கையின் பின்னணியில், ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டம் போர்க்கப்பல்களுக்கு மட்டுமே […]
கொழும்பில் பாகிஸ்தானின் போர்க்கப்பல்கள்

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை நேற்று(12) வந்தடைந்துள்ளன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்களே இவ்வாறு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்படையினரால் அக்கப்பல்கள் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NIAMAT SAEED KHAN செயற்படுகிறார். அதேபோல், ‘PNS ASLAT’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NADIR MATEEN AFRIDI செயற்படுகின்றார். மேலும், இந்த போர்க்கப்பல்கள் […]
சம்பூர் வெளிச்சவீடு கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

மூதூர் – சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் நேற்று(12.04.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மூதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்று (12) மாலை சம்பூர் வெளிச்சவீட்டு கடல் பகுதியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். இளைஞன் […]